1258 You are resurrected
You have been
Indeed risen
You redeemed
This world
You have broken
The sting of death
And paved the way
For humanity to live
This body
Will perish
It will disappear
Without leaving any trace
You changed
This law of nature
By raising
From the dead
A day will
Come for us
To receive
That blessed status
Till that time
Our mortal body
Will perish
With the mud
In the final day
Raising us from dead
You will provide
The new body
Receiving your image
In that body
We will live
Together with you
Till that day
Give us
Relationship to us
That will never
Separate us from you
Though many troubles
That will
Come in this body
Mathigiri, 4-4-2021, 10.30 p.m.
For me the message of the Resurrection is not demonstrating the power of the God in the past or portraits our blessed hope in the future, but what it means in the present while living in this mortal body. In this my bhakti helps me to enjoy my relationship with Him in everyday life trusting His power and living with the faith for the blessed hope in spite of the ailments and issues related with the moral body.
1258 உயிர்த்து எழுந்தாய்
உயிர்த்து நீயும்
எழுந்து விட்டாய்
உலகம் உய்ய
மீட்டுக் கொண்டாய்
மரணம் அதனின்
கூறை ஒடித்தாய்
மாந்தர் வாழ
வழியும் வகுத்தாய்
மேனி அதுவும்
அழிந்து போகும்
மீதம் இன்றி
மறைந்து போகும்
இந்த இயற்கை
நியதி தன்னை
உயிர்த்து எழுந்து
மாற்றி விட்டாய்
அந்த பேற்றை
நாங்கள் பெறும்
நாள் ஒன்று
வந்து தீரும்
அது வரையில்
எங்கள் மேனி
மண்ணுடனே
மறைந்து போகும்
இறுதி நாளில்
எம்மை எழுப்பி
புதியே மேனி
நீயும் தருவாய்
உந்தன் சாயல்
அதனுள் அடைந்து
உன்னுடன் என்றும்
இணைந்து வாழ்வோம்
அது வரையில்
இந்த உடலில்
வந்து சேரும்
துன்பம் எதுவும்
உன்னை விட்டு
பிரிக்க முடியா
பந்தம் அதனை
இன்று தருவாய்
மத்திகிரி, 4-4-2021, இரவு, 10.30
The post Bhakti Theology Song 1258 appeared first on Dayanand Bharati.