1304 I am afraid
I don’t have
The habit of
Living with
Any fear
When I live
As your bhakta
There is no need
For me to fear
Nothing has come
So far in life
That could
Separate us
You will
Make me to live
Not allowing it happen
And I don’t have any worry about it
All the sufferings
That comes in the body
Will go
One day in life
All the depression
That comes in the heart
Will disappear
By your grace
My spirit
Which you have redeemed
By giving your life
Is in your hand
As your will
Is leading me
I will proceed further
There is no confusion in this
Each day
When your
Protection is
Around me
Nothing will
Stand against me
Therefore I
Have no fear at all
But I still
Do not trust
My nature
Which came with my birth?
I still
Has fear about it
And that fear is
Not going away
For some reason
You kept it
As the messenger
Which hits me?
You try to
Control me
Like the angusam
In the hand of a mammoth
Having that
Fear alone
This slave will
Live with much obedience
Gurukulam, 25-11-2021, 11.00 p.m.
Fear is a natural instinct for all of us. But as a bhakta of the Lord though I managed to overcome certain fears [about death, about other’s opinion about me etc.] still I am afraid of my own fallen nature which often threatens me to rob several personal gifts given by God. At the same time I think that God uses this fear to keep me under His control like a mammoth [elephant trainer] who uses ‘angusam’ [a small sharp instrument which he keeps in his hand when he rides on the elephant to control it] to control me.
1304 அஞ்சுகிறேன்
பயந்து நடுங்கி
ஒடுங்கிக் கிடக்கும்
பழக்கம் மட்டும்
எனக்கு இல்லை
உன் பக்தனாக
வாழும் போது
அச்சம் கொள்ளத்
தேவை இல்லை
உன்னை என்னை
பிரிக்கும் ஏதும்
வாழ்வில் இதுவரை
வந்ததே இல்லை
அதற்கு இடமும்
தந்து விடாமல்
வாழ வைப்பாய்
கவலை இல்லை
தேகம் தன்னில்
வந்து சேரும்
துன்பம் யாவும்
நீங்கும் ஒருநாள்
மனதில் தோன்றும்
மடிவு யாதும்
மறைந்து போகும்
உனது அருளால்
உன்னைத் தந்து
என்னை மீட்ட
எனது ஆவி
உனது கையில்
உனது சித்தம்
வழியும் நடத்த
தொடர்ந்து செல்வேன்
குழப்பம் இல்லை
அனு தினம்
உனது காவல்
என்னைச் சூழ
இருக்கும் போது
எதிர்த்து நிற்ப
தேதும் இல்லை
எனவே அச்சம்
துளியும் இல்லை
ஆனால் எனது
பிறவிக் குணம்
அதனை மட்டும்
நம்ப வில்லை
அதற்கு மட்டும்
அஞ்சு கின்றேன்
அந்த பயமோ
நீங்க வில்லை
என்னைக் கொட்டும்
தூதனாக
அதனை ஏனோ
நீயும் வைத்தாய்
பாகன் கையின்
அங்குசம் போல்
அதனைக் கொண்டு
ஆட்டு கின்றாய்
அந்த அச்சம்
கொண்டு மட்டும்
கீழ்ப்படிந்து
அடிமை வாழ்வேன்
குருகுலம், 25-11-2021, இரவு, 11.00
The post Bhakti Theology Song 1304 appeared first on Dayanand Bharati.