1309 My expectation
Is your expectation
Alone is correct
And is my expectation
Is completely wrong
Should there be
No expectation
For a slave
Who looks unto her Master?
I never deny
The reason
In your
Expectation
I never prevented your right
As you have
Created redeemed
And take care of me
Nothing wrong
If I expect from you
As you know well
About all my needs
Do not the
Cattle expect fodder
Those are
Kept in a manger
Do you not know?
My needs
As I am
More important than cattle [for you]
Though I have
So many needs on this earth
If you fulfil
Only one of my needs
All my expectations
Will become complete in it
And your expectation
Also will be achieved
What else can I ask?
I need deliverance
If you bestow it
That will be a great blessing for you
Gurukulam, 3-12-2021, 10.15 p.m.
I become extremely tired both in body and mind. I want to be relieved from all entanglements in life which are unnecessary for me anymore. I want to pay attention only to my day to day life—taking care of an aged mother, reading, writing etc. I want to be ‘liberated’ from unnecessary commitments which were imposed on me—either by my own fault or by the necessity of life. I know I am ‘saved’ viz., I attained mukti. But this mukti is not helping me to get ‘delivered’ from so many other earthly chains which are binding me at present. So after reading Muktiveda when I sat for meditation this one thought alone occupied my mind. Then I wrote this song pouring my heart to the Lord as my prayer.
1309 என் எதிர்பார்ப்பு
உன் எதிர்பார்ப்பு
மட்டுமே சரியா
என் எதிர்பார்ப்பு
முற்றிலும் பிழையா
ஆண்டான் முகம்பார்க்கும்
அடிமைக்கு மட்டும்
எதிர்பார்ப்பு ஒன்றும்
இருக்கக் கூடாதா
உன் எதிர்பார்ப்பில்
உள்ள நியாயத்தை
என்றுமே நான்
மறுக்கவே இல்லை
படைத்து காத்து
மீட்ட உனக்கு
உள்ள உரிமையைத்
தடுக்கவும் இல்லை
எனது தேவையை
அறிந்த உன்னிடம்
நான் எதிர்பார்ப்பதில்
தவறுமே இல்லை
தொழுவத்தில் கட்டி
நிற்கும் மாடுகள்
புல் எதிர்பார்த்து
நிற்பது இல்லையா
அவற்றினும் மேலாய்
உள்ள எனது
அவசியம் அனைத்தும்
உனக்குப் புரியாதா
பலதேவை எனக்கு
உலகில் இருந்தாலும்
ஒருதேவை தன்னை
நீ நிறைவேற்றினால்
என் எதிர்பார்ப்பு
அனைத்துமே முடியும்
உன் எதிர்பார்ப்பும்
நிச்சயம் நிறைவேறும்
வேறென்ன கேட்பேன்
விடுதலை வேண்டும்
தந்தால் உனக்குப்
புண்ணீயம் ஆகும்
குருகுலம், 3-12-2021, இரவு, 10.15
The post Bhakti Theology Song 1309 appeared first on Dayanand Bharati.