Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 565

$
0
0

564 The Mask

 

Putting a mask

And acting well

Cheating others

Very nicely

 

We try to escape

When the act ends

We lament unnecessarily

Thinking about life

 

We never get the

Character that we seek

The character that we get

Is not properly fit for us

 

Still acting that role

For others sake

We try to complete

The drama

 

But the drama

Never comes to an end

As the next part is

Coming after that

 

Not liking the character

And unable to act properly

Somehow we manage

To carry our life

 

Thinking that

If death comes this will end

We wait eagerly

For that

 

Like an

Unending story

It will continue

Even after we were gone

 

As the next generation

Continue the same

As we lead them

As before

 

As long as the world

And life remains

There won’t be an

End to this mask

 

Mathigiri, 12-06-2021, 10.45 a.m.

 

We are what we are when we are ALONE ‘before god’. If you don’t believe in god then replace it with conscience.  Rest of our life is nothing but the mere act of putting a mask before others.  And there is no end to it even after our death as we leave this legacy for the next generation to continue.

 

564 முகத்திரை

 

முகத்திரை போட்டு

நன்றாக நடித்து

முற்றாக முழுதாக

பிறரையும் ஏய்த்து

 

வேடம் கலைகையில்

தப்பிக்க நினைத்து

வீணாகப் புலம்புறோம்

வாழ்வையும் நினைத்து

 

நாம்நாடும் வேடம்

கிடைப்பதும் இல்லை

கிடைத்த வேடமும்

பொருத்தமாய் இல்லை

 

ஆயினும் பிறர்காக

அதனையும் நடித்து

ஆட்டத்தை நாமும்

முடிக்க முயல்கிறோம்

 

ஆயினும் நாடகம்

முடிவதே இல்லை

அடுத்த பகுதியும்

தொடர்ந்து வருவதால்

 

வேடமும் பிடிக்காமல்

நடிக்கவும் இயலாமல்

ஒருவாறு வாழ்வை

தொடர்ந்து நடத்துறோம்

 

மரணம் வந்தால்

முடியும் என்று

அதையும் ஆவலாய்

எதிர்பார்த்து நிற்கையில்

 

என்றும் முடியாத

நெடுந்தொடர் போல

[தொடர்கதை போல]

போன பினாலும்

நம்பங்கு தொடரும்

 

அடுத்த தலைமுறை

அதனையும் தொடர

அவர்க்கு வழிகாட்டி

நாமும் செல்வதால்

 

உலகமும் வாழ்வும்

உள்ள வரையில்

முகத்திரைக் கென்றும்

முடிவுரை கிடையாது

 

மத்திகிரி, 12-06-2021, காலை 10.45

The post Secular Song 565 appeared first on Dayanand Bharati.


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles