565 What peace is?
I searched to know
what peace is
I gave my own
definition for it
Still I didn’t
get the peace
and the explanation that I give
is not clear to me
Therefore I stopped
doing the research
And try to avoid
asking questions about it
Then peace
came on its own
It gave it is own
definition for it [peace]
But it put
one condition for that
It told that I should not
write anything about it
It told me that
try to learn to live
silently what your
heart realized
unable to
overcome that restriction
unable to accept
as it is
still thinking that
let it be
I wrote
these lines
But that became
a snare again
as these lines
become another explanation
Until I stop
writing further
it refused to
stay with me
I don’t know which one is correct
and which one is wrong
I don’t know to whom
I shall listen
Therefore unable to take risk
further by doing research
I silently went in the way
peace asked me to do
Mathigiri, 19-06-2021, 6.00 p.m.
Write or not to write become my problem. I don’t want to write. But my mind refuses to listen to these resolutions several times. So when I wrote it further resulted in asking further questions leading to further research and giving explanation. Then peace evades when I try all this. Got between rock and hard place I can either write or stop it. Anyhow I made a temporary truce with peace and decided not to write for some time.###
565 எது அமைதி
அமைதி எதுவென
ஆராய்ந்து பார்த்தேன்
அதெற்கொரு விளக்கம்
நானுமேத் தந்தேன்
ஆயினும் அமைதி
கிடைக்கவும் இல்லை
சொன்ன விளக்கமும்
புரியவும் இல்லை
ஆகவே ஆய்வதை
நானுமே நிறுத்தினேன்
அதுபற்றி கேள்விகள்
கேட்பதைத் தவிர்த்தேன்
அதன்பின் அமைதி
தன்போல் வந்தது
அதற்கான விளக்கம்
அதுவுமேத் தந்தது
ஆயினும் அதுஒரு
தடையுமே போட்டது
அதுபற்றி எதையும்
எழுதாதே என்றது
மனதுக்குப் புரிந்ததை
மவுனமாயாய் ஏற்று
வாழப் பழகிடு
என்றுமே சொன்னது
அந்தத் தடையை
மீறவும் முடியாது
ஆயினும் அதையே
ஏற்கவும் இயலாது
எதற்கும் இருக்கட்டும்
என்றுமே எண்ணி
இந்த வரிகளை
நானுமே எழுதினேன்
அதுவே மீண்டும்
ஆபத்தாய்ப் போனது
இதுஒரு விளக்கமாய்
இருந்ததினாலே
எழுத்தை மீண்டும்
நிறுத்திடும் வரையில்
என்னிடம் தங்க
அமைதியும் மறுத்தது
எதுசரி எத்துதவறு
என்பது புரியலை
எவர்பேச்சை நானும்
கேட்பது தெரியலை
ஆகவே மேற்கொண்டு
ஆராயாத் துணியாமல்
அமைதி கூறிய
வழியிலே சென்றேன்
மத்திகிரி, 19-06-2021, மாலை, 6.00
The post Secular Song 565 appeared first on Dayanand Bharati.