உன் கிருபையே ஆகும்
என்னவோ நேரம்
போகட்டும் என்று
ஏதுமே நானும்
செய்யவே மாட்டேன்
ஒவ்வொரு நொடியும்
நீதந்த தென்று
உணர்ந்த நானும்
உனக்கென வாழ்வேன்
எதைச் செய்தாலும்
உனக்கெனச் செய்ய
ஏதுமே எனக்கு
பாரம் ஆகாது
உன்னையே என்னுள்
வைத்துமே செய்வதால்
எல்லாமும் எனக்கு
உன்பணி ஆனது
விரும்பியே செய்வேன்
சிலமுறை நானும்
வெறுப்புடன் செய்தேன்
பலமுறை தானும்
ஆயினும் இறுதியில்
அவைகளை நானும்
ஐயனே செய்தேன்
உனக்கென நாளும்
உணர்வுடன் உன்னுடன்
வாழ்கின்ற போது
ஒவ்வொரு நொடியும்
பயனுள்ள தானது
உன்னுடன் உனக்கென
வாழ்கின்ற போது
வீணிலே நேரம்
போவது ஏது
ஒருசில நேரம்
உணர்ச்சியும் மோதும்
பலமுறை மனதோ
அமைதியாய் வாழும்
எனவே அனுபவம்
ஏதான போதும்
எல்லாமே நீதரும்
கிருபையே ஆகும்
மத்திகிரி, 9-1-18, மதியம் 2.55