தினம்வாழ வேண்டும்
இதுபோன்ற ஒருவாழ்வு
தினம்வாழ வேண்டும்
எப்போதும் உன்னோடு
உறவாட வேண்டும்
இரவென்றும் பகலென்றும்
பேதம் இல்லாமல்
இதுபோன்று உன்னடி
நான்தேட வேண்டும்
இதற்கென்றே இவ்வாழ்வை
நீயிங்கு தந்தாய்
எப்போதும் உறவாடும்
வாய்பொன்று தந்தாய்
இசையோடு தமிழ்பாட
வரமொன்று தந்தாய்
இதையெண்ணி அனுதினம்
கொண்டாட வேண்டும்
எந்நேரம் உன்னையே
நானென்ன வேண்டும்
இதயத்தில் நீவந்து
குடிகொள்ள வேண்டும்
எனக்காக நீதந்த
புதுவாழ்வை எண்ணி
என்னுளம் உனைப்போற்றி
பண்பட்ட வேண்டும்
துதிக்கும் துதியினில்
தெய்வீகம் கமழும்
திருவடி நாடிட
தும்மையும் பெருகும்
தெவிட்டாத இன்பம்
தேனாகப் பாயும்
சிந்தையில் அமைதி
தன்போல நிறையும்
எஞ்சிய நாட்களும்
இதுபோன்று வாழ்ந்து
இதயத்தில் உனைப்போற்றி
மனமாறப் பணிந்து
இசையோடு பண்பாடி
உன்னையே பணிந்து
என்னையே உனதாக்கி
நான்வாழ வேண்டும்
மத்திகிரி, 10-1-18, காலை, 3.50