நீயே செய்தாய்
எனக்கோர் நன்மை
செய்திட வேண்டி
சிலசில செயல்களை
நீயும் செய்தாய்
எனக்கெது தேவை
என்பதை அறிந்து
மனிதர் மூலம்
செயல்பட வைத்தாய்
ஆகவே செயல்கள்
எது நடந்தாலும்
அதன்பின் உனது
சித்தத்தை அறிந்தேன்
ஆயினும் எனது
அவசர குணத்தால்
பொறுமை காக்க
ஏனோ மறந்தேன்
எண்குணம் நீயும்
அறிந்ததினாலே
என்னையும் மீறி
எனையாட் கொண்டாய்
எது நடந்தாலும்
உன்சித்தம் காண
எனது அகக்கண்
நீயும் திறந்தாய்
அறியா சிறுவன்
அதைநீ அறிந்து
அதற்கு ஏற்ப
நடத்திடுவாயே
அனுதின வாழ்வில்
எது நடந்தாலும்
உன்சித்தம் அறிய
உதவி செய்வாயே
மத்திகிரி, 13-2-18 இரவு, 11.30௦