உனது இரகசியம்
இரகசியம் உனது
புரிந்தது எனக்கு
அதன்பின் வந்தது
அமைதி எனக்கு
வெளிப்படையாக நீ
செய்கின்ற போதும்
விளங்க மறுத்து
மருண்டது மனதும்
சிந்தையில் தெளிவு
அகன்றதாலே
காண மறுத்து
இருண்டது கண்ணும்
உனது வேதம்
சொன்ன போதும்
உணர மறுத்து
வெருண்டது இதயம்
அறிவும் கலங்கி
இதயம் குழம்பி
சோர்ந்து போனது
ஆன்மா தன்னில்
இதனை உணர்ந்து
இரக்கம் கொண்டு
என்னிடம் அந்த
இரகசியம் சொன்னாய்
அதனை நானும்
அறிந்த பின்னே
ஆனந்தம் மேலிட
துத்தித்தேன் உன்னை
மத்திகிரி, 13-2-18, இரவு 11.55