287 You uphold me
You dwell in my whole heart
I too will dwell in your love
To those who seek you as their refugee
You will comfort by saying, ‘don’t be afraid’.
You give boon to worship you everyday
You give the status not to go away from you
If we call you as ‘Father’
You reach out and protect us.
You gave bhakti with much compassion
As we cannot understand your noble grace
You took mercy on this foolish one
To reveal your greatness which is beyond the reach of wise?
If I am tossed alone in my heart
You will take me to the shore by becoming the boat
When I become depressed out of frustration
You will give strength in my heart by comforting me
What all the things that you become to us
How many ways you are upholding us
By, transcending body, mind and feelings
You lord over us through your inner light.
18-03-15, Mathigiri, 1.30 p.m.
Again some depression and frustration occupied my mind. I was longing to go back to the ashram. More I long for it, more I get frustration. Then I asked God to remove that longing and fill my whole being only with His presence. Then I wrote this song.
287 தாங்குகின்றாய்
நெஞ்சமெல்லாம் நீ நிறைந்திருப்பாய்
உன்நேசத்தில் நான் நிலைத்திருப்பேன்
தஞ்சமென உன்னை அண்டினோர்க்கு
“அஞ்சேல்” என அணைத்து ஆதரிப்பாய்
நித்தமும் தொழுதிட வரமளிப்பாய்
உன்னை நீங்கிடா நிலையை எமக்களிப்பாய்
“அத்தனே” என்று அழைத்துவிட்டால்
அண்டிவந்து எம்மைக் காத்திடுவாய்
புத்தியால் அறியாஉன் பேரருளை
பக்தியால் அறிய பரிவுகொண்டாய்
ஞானிக்கும் எட்டா உன்மேன்மையினை
பேதைக்கு காட்ட இரக்கம்கொண்டாய்
தனித்து மனதில் தத்தளித்தால்
தெப்பமாய் வந்து துறைசேர்ப்பாய்
சலித்து மனதால் விரக்தியுற்றால்
தேற்றி மனதில் தெம்பளிப்பாய்
என்னவெல்லாம் எமக்கு நீயானாய்
எப்படி எல்லாம் எம்மை தாங்குகின்றாய்
உடல் மனம் உணர்வை கடந்துநின்று
உள்ளொளியால் எம்மை ஆளுகின்றாய்.
18-03-15,மத்திகிரி,1.30மதியம்.