476 வாழ்க்கைப் பாடம்
தொல்லைகள் இல்லாமல்
வாழ்க்கையும் இல்லை
துன்பங்கள் வராமல்
வாழ்வுமே இல்லை
ஆயினும் இவற்றாலே
சோர்ந்துமே போனால்
அதன்பின் முன்னேற
வழியேதும் இல்லை
தன்போல் தொல்லைகள்
தேடி வந்தாலும்
நாம்போய் அவற்றை
வாங்கிக் கொண்டாலும்
இறுதியில் அவற்றை
எதிர்கொள்ள வேண்டும்
எவ்வித மேனும்
மேற்கொள்ள வேண்டும்
துன்பங்கள் கண்டு
துவண்டுமே போகாது
துன்பம் தருகின்ற
பாடத்தைப் பயின்று
அதனால் வருகின்ற
அனுபவம் கொண்டு
அவற்றை வென்று
வாழ்ந்திட வேண்டும்
அவைதரும் கல்விக்கு
ஈடிணை இல்லை
ஏட்டினில் அவற்றை
கற்பதும் இல்லை
சொல்லியேத் தந்திட
யாருமே இல்லை
நமக்காக மற்றவர்
கற்பதும் இல்லை
அதனாலே அவற்றின்
அருமையை அறிந்து
அவைதரும் பாடத்தை
வாழ்க்கையில் பயின்று
அதன்மூலம் நாமும்
வாழ்வினை வென்று
பிறரும் பயின்றிட
உதவணும் நன்று
மத்திகிரி, 29-09-2018, காலை 9.00