அலசடிப் படுவோமே
எவருக்கில்லை துன்பம்
எவருக்கிலை துக்கம்
என்வரை மட்டுமேநான்
எண்ணலாகுமோ மனமே?
தன்னையே சுற்றிவந்து
தன்வரை வாழ்ந்திருந்து
தனியாகிப் போவோமே
தனித்தே நிற்போமே
அந்நேரம் நம்பாரம்
சுமப்பவர் எவருமின்றி
அலைகடல் துரும்பாகி
அலசடிப் படுவோமே
அடுத்தவர் நலனெண்ணி
அவரின் வாழ்வெண்ணி
அனுசரித்து வாழ்ந்தாலே
அடைவோம் நலமே
நாமாகப் பிறக்கவில்லை
நாமாக வளரவைல்லை
நாலுபேர் துணையின்றி
ஊர்போய் சேர்வதில்லை
இதையும் புரிந்துகொண்டு
இசைவுடன் நடந்துகொண்டு
இயன்றமட்டும் உதவிசெய்து
இயல்பாய் வாழவேண்டும்
4.3.16, மத்திகிரி, மதியம் 2.30