442 You should bestow knowing our need
I come before you
Folding both my hands
Seeking your grace
Have pity on this slave
As I do not know
What is my need?
As you know well about it
You should bestow it joyfully
The needs of the body are many
The needs of the mind is also many
But the need of the atman is only one
After knowing that I come unto you
What can I tell to you?
Once you know my condition
Give that alone (according to my need)
What else can I say?
I need your relationship everyday
I should live abiding in you
I should know your will
And you should do all these happily (to me)
I should live
Making my body, mind and atman as yours
As long as live on this earth
You should bestow only this to me.
10-6-16, Gurukulam, 6.00 a.m.
Though I ask many things from God, the reality is that actually I don’t know what actually my need is. However I know for one thing that I need His Grace. As I was thinking this, I wrote this song.
442 தேவை அறிந்து தரவேண்டும்
அடியவன் மீது இரக்கம் கொண்டு
அருளைத் தர வேண்டு மென்று
இரு கரம் ஏந்திக் கொண்டு
ஏழை நானும் வந்து நின்றேன்
என் தேவை என்ன வென்று
எனக்கும் நன்கு தெரியா தென்று
உணர்ந்த நீயும் கருணை கொண்டு
உவந்து அளிக்க வேண்டி வந்தேன்
உடலின் தேவை அநேக முண்டு
உள்ளத் தேவையும் அதிக முண்டு
உயிரின் தேவை ஒன்றே ஒன்று
உணர்ந்த பின்னே நாடி வந்தேன்
என்நிலை நீயும் அறிந்த பின்னே
என்ன சொல்வது இனி உனக்கு
அந்த ஒன்றை மட்டும் தந்துவிடு
வேறு என்ன சொல்ல உண்டு
உன் உறவு தினமும் வேண்டும்
உன்னுள் நிலைத்து வாழ வேண்டும்
உன் சித்தம் அறிய வேண்டும்
உவந்து அதைச் செய்ய வேண்டும்
உடல், உள்ளம், உயிரைக் கூட
உனதாக்கி வாழ வேண்டும்
உலகில் வாழும் நாட்கள் மட்டும்
இந்த ஒன்றை நீயும் தரவேண்டும்
10-6-16, குருகுலம், காலை, 6.00