451 Tried my best to communicate
I should go to the world without any language
And should live in it silently
And I should transcend both thought and speech
And should worship His Holy feet
Others need not understand this
And even my mind need not experience it
And I need not analyse it with my reason
But I should seek only His Holy feet
Even transcending the concept of ‘mukti
And breaching the condition of the very silence itself
And rejoicing in the bliss of bhakti
I should seek His lotus feet
There is no need for me to ask anything
And there is no particular desire
And I need not even sing and dance
And I should surrender at His Holy feet
He already came within me
And He revealed it only to me
But there is no secret in it
But none will understand even if I try to communicate
Once reached that status
There are no words to communicate it
Even if I use the language of ‘silence’
Yet that too failed to communicate it
Yet I wrote something like this
And only shared that experience alone
And going to the end of language
I tried my best to communicate it
Mathirigi, 21-6-16, 3.00 pm.
I often do silent prayers, in which several times I won’t say anything. Sometime I will allow my mind to wander on various issues and submitting to the Lord. But I find some solace when I don’t even have anything to say to the Lord. Though language is a blessing, yet I find that it put so many constraints for me to communicate with God. I long to go beyond a stage in which there is no place for any kind of communication through any language. Even silence won’t able to understand or communicate it. It is very difficult for me even to convey such experience through these words. For me all communication either oral or written, express the limitation of language itself.
451 முடிந்தமட்டும் கூறினேன்
மொழியற்ற உலகிற்குப் போக வேண்டும்
மெளனமாய் அதனுள்ளே வாழ வேண்டும்
சிந்தை-சொல் தன்னையே கடக்க வேண்டும்
அவன் சேவடி தன்னையே பணியவேண்டும்
மற்றவர் எவரும் அறிய வேண்டாம்
மனதுக்கும் கூடப் புரிய வேண்டாம்
சிந்தையால் அலசிப் பார்க்க வேண்டாம்
அவன் திருவடி ஒன்றையே நாடவேண்டும்
முக்தியின் நிலையைத்தான் கடந்து
மோனத்தின் எல்லையை மீறிக் கொண்டு
பக்தியால் ஆனந்தம் மேற் கொண்டு
அவன் பாதார விந்தத்தை நாடவேண்டும்
வேண்டிட ஏதும் தேவையில்லை
விருப்பமும் கூட ஒன்றும் இல்லை
பாடி ஆடிடத் தேவை யில்லை
அவன் பாதத்தில் சரண் புகவேண்டும்
என்னுள்ளே அவனும் வந்து விட்டான்
எனக்கு மட்டுமே சொல்லிவிட்டான்
இதில் இரகசியம் என்று ஏதுமில்லை
ஆனால் சொன்னாலும் யாருக்கும் புரிவதில்லை
அந்த நிலையை அடைந்த பின்னே
அதைச் சொல்லிட வார்த்தை ஏதுமில்லை
மெளன மென்ற மொழிகூட
முயன்றும் வெற்றி பெற வில்லை
ஆயினும் ஏதோ எழுதி வைத்தேன்
அந்த அனுபவத்தைத்தானே சொல்லி வைத்தேன்
மொழியின் எல்லைக்குச் சென்று நானும்
முடிந்த மட்டும் கூறி வைத்தேன்
மத்திகிரி, 21-6-16, மதியம் 3.00