469 Clear verdict
We blow it out of proportion
And we make it a gossip
As the truth is completely different (within our heart)
We put a mask of a perfect being
If we began to share the facts as they are
Our true intention will become known
In order to hide the facts, by telling so many others things
We stage a drama for others to appreciate us (about our innocence)
Once our own heart began to accuse us
What reason can we give for that?
As our own shadow chases us
Where can we escape from it?
Fortunately God has kept this heart
As we unable to avoid its voice
He also kept a witness within us
As we cannot change it (as we like)
Where are the words for us to argue?
When the case comes before Him
As the heart gives the witness
Where is the hope to hide?
He left the judgment with us
And clearly closed the case
Will we tell the facts as they are?
Or we will blow it out of proportion
14-7-16, Mathigiri, 1.50 pm.
This is one constant problem that I face in my life. Though I try to presnet the facts as they are, I feel within me that I am bit exaggerating it beyond its limit. Though I put a mask before others and pretend as an innocent person, as my own heart accuses me, there is no escape for me from that. And God also clearly closed the case leaving the verdict with me. Now the ball is in my court.
469 தெளிவான தீர்ப்பு
ஊதிப் பெரிதாக்கிக் காட்டுகின்றோம்
ஊர்தூற்றச் சொல்லியே காட்டுகின்றோம்
உள்ளத்தின் உண்மை வேறாக இருக்க
உத்தம வேடமே போடுகிறோம்
உள்ளதை உள்ளதாய்க் கூறிவிட்டால்
நம் உள்நோக்கம் உண்மையில் புரிந்துவிடும்
உண்மை மறைக்க ஏதேதோ சொல்லியே
ஊர்மெச்ச வேடமே போடுகின்றோம்
நம்முள்ளம் நம்மையே குற்றம் சாட்ட
நாமென்ன காரணம் கூறுவது
நம்நிழல் நம்மையே நாளும் துரத்த
நாமெங்கே தப்பித்து ஓடுவது
நல்லவேளை இந்த உள்ளம் வைத்தான்
நாம் கேட்க மறுக்க இயலாமல்
நம்முள்ளே சாட்சி ஒன்றை வைத்தான்
நாம் மாற்றிக் கூறிட முடியாமல்
வழக்கு அவன்முன் வரும் போது
வாதாட வார்த்தைக்கு இடமேது
உள்ளமே சாட்சி தரும்போது
உண்மையை மறைக்க இடமேது
தீர்ப்பையும் நம்மிடம் விட்டுவிட்டான்
தெளிவாய் வழக்கை முடித்துவிட்டான்
உள்ளதை உள்ளதாய்க் கூறுவோமோ
ஊதிப் பெரிதாக்கிக் காட்டுவோமோ
14-7-16, மத்திகிரி, மதியம் 1.50