1006 புரிந்து கொண்டேன்
தெரிந்துமே செய்கிறேன்
தெரியாமல் இல்லை
புரிந்துமே சொல்கிறேன்
புரியாமல் இல்லை
தெரியாமல் புரியாமல்
வாழ்ந்திருந்தாலோ
குற்றமும் சொல்லிட
வழியேதும் இல்லை
நீவந்து சொன்னதால்
நான் உணரவில்லை
நீசொல்லும் முன்னமே
உணராமல் இல்லை
யார்வைத்த குரலது
தெரியவும் இல்லை
ஆயினும் எவரையும்
பொறுப்பாக்க வில்லை
எனக்கு நானே
விதித்திட்ட நீதியில்
ஏனோ நானும்
வாழவும் இல்லை
காலமா கருமமா
கடவுளா என்ற
கேள்விக்கும் சரியான
விடைகாண வில்லை
இறுதியில் நீசொன்ன
விடையொன்று மட்டுமே
என்னவோ என்னுள்ளே
மாற்றமும் செய்தது
ஆகவே அதனையும்
ஆராய்ந்து பார்த்ததில்
அதுவரை காணாத
பதிலும் கிடைத்தது
அதனையும் ஏற்று
அடிபணிந்து வந்தபின்
அடியனை மீட்டுநீ
ஆண்டது புரிந்தது
அதனைத் தெரிந்துமே
ஐயனே வந்தேன்
அதன்பின் உன்னையும்
புரிந்துமே கொண்டேன்
ஆகவே இனிமேலும்
அறியாமல் புரியாமல்
ஐயனே ஒருகாலும்
நான்வாழ மாட்டேன்
மத்திகிரி, 3-11-18, இரவு, 11.30