477 We can experience through our senses
I searched everywhere to see you
And I searched even my heart to find you there
Unable to see you anywhere and as I bolt within me
There I found you for me to see
“Searching every place other than where he dwells
People are searching everywhere O wise woman
They don’t know anything O wise woman”
Clearly Kannadasan told about this already
Though one sees the one who dwells within
They cannot experience him O wise woman
Unable to realize the one who mingles with us
What is the use of seeing within us?
He will come and dwell within us
And will live with you all the time
Until you understand him through your senses
He will wait for you too
Keeping butter on your hand
Don’t go after seeking clarified butter (ghee)
Leaving the one who dwells within you
Don’t search him everywhere.
28-7-16, Mathigiri, 4.00 am.
This I wrote after reading Kashmir mystic poet Lal Ded (Ranjit Hoskote, I Lalla: Translated from the Kashmiri with an Introduction and Notes, New Delhi, Penguin Books, (2011) paperback edition, 2013, Poem, 11, p. 13
I, Lalla, wore myself down searching for Him
and found a strength after my strength had died.
I came to His threshold but found the door bolted.
I locked that door with my eyes and I looked at Him.
477 உணர்வில் காணலாம்
ஊரெங்கும் தேடினேன் உன்னையே காண
உள்ளத்தில் தேடினேன் அங்கேயும் காண
எங்குமே காணாது என்னுள் தாள்போட
அங்கே கண்டேன் உன்னையே நானே!
“இருக்கும் இடம்விட்டு இல்லாத இடம்தேடி
எங்கெங்கோ அலைகிறார் ஞானப்பெண்ணே
அவர் ஏதும் அறியாரடி ஞானப்பெண்ணே”
என்றேயிதைக் கவி* சொல்லி வைத்தான் பின்னே
உள்ளே இருப்போனை உண்மையில் கண்டாலும்
உணராதிருப்பாரடி ஞானப்பெண்ணே
உணர்வில் கலந்தோனை உள்ளபடி அறியாமல்
உள்ளே கண்டென்ன ஞானப்பெண்ணே
உள்ளத்தே வந்து குடியிருப்பான்
உன்னுடன் சேர்ந்தே வாழ்ந்திருப்பான்
உணர்வால் அவனை அறியும்மட்டும்
உனக்கெனவே அவனும் காத்திருப்பான்
வெண்ணையைக் கையிலே வைத்துக்கொண்டு
ஊரெங்கும் நெய்தேடி அலையாதே
உள்ளே இருக்கும் அவனை விட்டு
ஊரெங்கும் தேடி இனித் திரியாதே
*கண்ணதாசன்
28-7-16, மத்தி