Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 479

$
0
0

479 Come to Praise Him

I have done some ‘punya’ (merit)
To sing the glory of the Holy One
And what kind of blessing that I received on this earth
To hail His fame

Who else will get a blessedness other than this?
And who will receive that joy other than me
Who can know this other than those experienced this
And who can understand this noble secret

I wrote not because I want to write something
And I didn’t sing just at random
As the joy overflew within me
It need not be communicated through words

I was sitting alone
And that time He came to that side
And agreeing with Him I also gave myself to Him
And He mingled within me

How the time went we don’t know
And I am unable to communicate it
We don’t want get separated
And we need not tell it to others

But those who understood my nature
Came seeking to know about it
In order to share the joy which I had
I communicated in words about what happened to me

As they too join with me
We received immense joy
If you too want this, come
And joining us worship Him

3-8-16, Mathirigi, 5.45 pm.

As I went for my evening walk, I was thinking about the blessed opportunity for me to praise and worship Him at any time. As I began to reflect on it, I wrote this song which I completed after returning back from my walk.

479 வந்திடுவீர்

புண்ணியம் நானும் செய்துவிட்டேன்-அந்தப்
புனிதனைப் போற்றிப் பாடிடவே
புவிதனில் எத்தனை பேறு பெற்றேன்-அவன்
புகழினைச் சொல்லிப் போற்றிடவே

இதனினும் பேறு எவர் பெறுவார்
என்னிலும் ஆனந்தம் எவர் அடைவார்
உணர்ந்தவர் அன்றி எவர் அறிவார்
இந்த உன்னத இரகசியம் யார்புரிவார்

எழுத நினைத்து எழுத வில்லை
ஏதோ தோன்றப் பாட வில்லை
என்னுள் ஆனந்தம் கொப்பளிக்க
எழுத்தில் கூறிடத் தேவை யில்லை

தனித்து நானும் அமர்ந்திருந்தேன்
அந்தத் தருணம் பார்த்து வந்துவிட்டான்
உணர்ந்து நானும் உடன் பட்டேன்
உணர்வுடன் ஒன்றாய்க் கலந்துவிட்டான்

நேரம் போனது தெரியவில்லை
இந்த நிலையினைச் சொல்லத் தெரியவில்லை
பிரிந்து போக மனதும் மில்லை
பிறர்க்குச் சொல்லிடத் தேவை யில்லை

ஆயினும் என்நிலை புரிந்து கொண்டார்
ஆவர்வமுடன் கேட்கத் தேடிவந்தார்
யான்பெற்ற இன்பம் அவரும் பெற
எனக்கு நடந்ததை எழுத்தில் சொன்னேன்

என்னுடன் அவரும் சேர்ந்து கொள்ள
எல்லை இல்லா இன்பம் பெற்றோம்
இதனை வேண்டினால் வந்திடுவீர்
எம்முடன் இணைந்து பணிந்திடுவீர்

3-8-16, மத்திகிரி, மாலை, 5.45


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles