Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 481

$
0
0

481 Leave me alone

Until I rest in you
My heart won’t realize the peace
Until I tell this
I cannot find comfort within me

Something is disturbing my heart
I am bewildered unable to understand that
How many times I try to analyze it
Something is missing from my hand

I tried to remain in silence
And stopped even analysing
And I postponed coming unto you
And locked my heart within me

Thinking that it is better to remain like this
I immersed within me
But as I found an emptiness even there
Seeking peace I came at your feet

I want to ask something to you
Unable to understand I come unto you
Unable to utter I sob within me
And fall at your feet unable to do anything

It is better, kindly leave me alone
And stop wrestling with me unnecessarily
More than this how I can say to you
And kindly do this help now

Mathigiri, 10-8-16 (11.8-16) 12.15 am.

I felt some kind of emptiness within me. This is not depression but some kind of dryness. I cannot even read or pray. Then stopping my writing, I sat silently try to think nothing. Then my mind began to wander on various thoughts. Finally I thanked God for giving this opportunity to sit alone with Him and pour out my heart. That time tears came and I wrote this song. For some it look that I have some psychological problem; for some it might be mere emotional feeling; others might consider this a mystic experience and for others it is nothing but my nature (prakruti). But I don’t know what it is.

481 என்னை விட்டுவிடு

உன்னுள்ளே என்னுள்ளம் ஓய்கின்ற வரையில்
ஒருநாளும் அறியாது அமைதியே தன்னில்
உன்னிடம் இதைநான் சொல்கின்ற வரையில்
உண்மையில் காணேனே நிம்மதி என்னில்

ஏதோ ஒன்று இதயத்தை நெருடுது
அதுவென்ன வென்று புரியாது தவிக்குது
எத்தனை முறை என்னை ஆராய்ந்து பார்த்தும்
ஏதோ ஒன்று கைநழுவிப் போகுது

ஏதும் பேசாது இருந்துமே பார்த்தேன்
எண்ணியே பார்ப்பதை நிறுத்தியும் வைத்தேன்
உன்னிடம் வருவதை ஒத்தியும் வைத்தேன்
உள்ளத்தை உள்ளத்தே பூட்டியும் காத்தேன்

இப்படி இருப்பதே நலமென எண்ணியே
என்னுள்ளே நான்மூழ்கி அமிழ்ந்தும் இருந்தேன்
ஆயினும் அங்கேயும் வெறுமையைக் காண
அமைதியைத் தேடி உன்னடி வந்தேன்

என்னவோ உன்னிடம் கேட்கவும் எண்ணுறேன்
எனக்கும் புரியாது உன்னிடம் வருகிறேன்
சொல்லவே தெரியாது என்னுள்ளே தேம்புறேன்
செயலற்று உன்பாதம் தன்னிலே வீழ்கிறேன்

வேண்டாம் போ என்னை நீயுமே விட்டிடு
வீணாகப் போராடிப் பார்ப்பதைத் தவிர்த்திடு
இதைவிட உனக்கு எப்படிச் சொல்வது
இந்த உதவியை இப்போது செய்திடு

மத்திகிரி, 10-8-16 (11.8-16) இரவு 12.15


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles