484 Without you I am no more
Becoming the sense in my heart
And core to my thought
And becoming fullness of my life
You live with me
There is no lack of grace
And no end to your love
There is no other protection
Other than your compassion
There is no separation between us
And no shortage in our relationship
Once I lived with you
I don’t have a life without you
Nothing to say more
And I don’t need anything more
I don’t have joy
Other than singing about you
I don’t have nobleness
Other than bhakti
And there is no protection other than you
For the bhaktas
You are the final resort
For mukti
O Muktesa
Without you I am no more
18-8-16, 11.00 pm. Mathigiri
As I continue to reflect my recent response on Bhakti and romance, I wrote this song in the night.
484 நீயன்றி நானில்லை
இதயத்தில் உணர்வாகி
எண்ணத்தில் கருவாகி
வாழ்வில் நிறைவாகி
வாழ்கிறாய் என்னோடு
அருளுக்குக் குறையில்லை
அன்புக்கு முடிவில்லை
கருணைக்கு நீயன்றிக்
காவலும் வேறில்லை
உணர்வுக்குப் பிரிவில்லை
உறவுக்குக் குறையில்லை
உன்னுடன் வாழ்ந்தபின்
நீயன்றி வாழ்வில்லை
இனிச்சொல்ல வேறில்லை
இனித்தேவை ஒன்றில்லை
உனையே பாடாமல்
ஒருபோதும் மகிழ்வில்லை
பக்திக்கு மிஞ்சிய
மேன்மை எனக்கில்லை
பக்தர்க்கு நீயன்றிக்
காவலும் வேறில்லை
முக்திக்கு நீயன்றி
முடிவு ஒன்றில்லை
முக்திக்கு ஈசனே
நீயன்றி நானில்லை
18-8-16, இரவு, 11.00 மத்திகிரி