491 This relationship is enough
This relationship is enough for me
And the content to talk with you is enough for me
A simple bhakti is enough for me
And if I live in it, that is enough for me
If the question arises that
“Who is God and what the need for him is”
I don’t have answer for that
And this question itself is not clear to me
Who knows that whether He is one or many?
Whether He is within us or outside, who realized this?
Whether He is imminent or transcendent, who knows this?
Whether He is male or female, who understood this?
I cannot understand the secret of the creation
And I don’t know who created all these
And I cannot understand how he created
And nobody knows why He created all these?
I have thousands of questions within me
But I haven’t decided to
Whom shall I go and ask
And I don’t know the reason for that
All the answers that I received so far
Are not addressing the questions
As they share what they know
There is no point of asking questions (to them)
Therefore I come to this conclusion
I have decided to talk only with you
And I don’t have any more questions with me
And I don’t need any answer for them
I came unto you silently
And shared what I felt within me
And I only seek this kind of relationship
In which we too live together like this
23-8-16, (24-8-16) 12.30 am. Mathigiri
As I continued to read the ‘Questions and Interventions’ on
Adelheid Mette’s sharing on: God-Gods—Transcendence, pp. 43- 86, in Bsteh (ed.) Hinduism Questioning Christianity (See song 490 for further details) by various scholars, I was overhelmed by their scholarship wich went beyond my comprehension. As this topic on God and Transcendence is a daunting question from time in memory, I said to myself, ‘it is beyond my reach to understand all these thoughts. It is enough for me to come and be in your presence’. Then I wrote this song as my prayer.
491 உறவு போதும்
இந்த உறவு ஒன்றே போதும்
உன்னோடு பேசும் நிறைவே போதும்
எளிய பக்தி இருந்தால் போதும்
என்றும் அதிலே வாழ்ந்தால் போதும்
இறைவன் யாரென்று கேள்வி எழுந்தால்
எதற்கு அவனது தேவை என்றால்
என்னிடம் அதற்குப் பதிலே இல்லை
இதுவரை கேள்வியே விளங்கவும் இல்லை
ஒன்றா பலவா யாரிதை அறிந்தார்
அகமா-புறமா யாரிதை உணர்ந்தார்
அருகோ-தொலைவோ யாரிதைத் தெரிந்தார்
ஆணா-பெண்ணா யாரிதைப் புரிந்தார்
படைப்பின் இரகசியம் புரியவும் இல்லை
படைத்தது யாரெனத் தெரியவும் இல்லை
எப்படி படைத்தான் என்பது விளங்கலை
ஏனிதைப் படைத்தான் அறிந்தவர் இல்லை
எனக்குள் ஆயிரம் கேள்விகள் இருக்கு
எவரிடம் சென்று கேட்பது என்று
இதுவரை முடிவு செய்யவும் இல்லை
ஏனென்று எனக்குத் தெரியவும் இல்லை
இதுவரை கிடைத்த பதில்கள் எல்லாம்
எந்தக் கேள்விக்கும் சரியாய் இல்லை
தமக்குத் தெரிந்ததைக் கூறுவதாலே
கேள்விகள் கேட்பதில் அர்த்தமே இல்லை
எனவே இந்த முடிவுக்கு வந்தேன்
உன்னிடம் மட்டுமே பேசிடத் துணிந்தேன்
இனிஒரு கேள்வி என்னிடம் இல்லை
எவ்வித பதிலும் தேவையும் இல்லை
மெளனமாக உன்னிடம் வந்தேன்
மனதில் பட்டதை உன்னிடம் கூறினேன்
இப்படியாக நாம் இருவரும் வாழும்
உறவை மட்டும் உன்னிடம் கேட்கிறேன்
23-8-16, (24-8-16) இரவு, 12.30