511 He knows
Will a mother tolerate?
When she listens to the cry of her baby
Won’t she took it immediately
And keep in on her bosom
Does the baby needs
To inform about its hunger
Won’t the mother feed it immediately?
To quench its hunger
He knows
Better than that
Definitely He will come
And why this much hesitation
We need not even raise our voice
To call Him
And we need not cry
Sharing our problems
Knowing your condition
Go to His feet
And stand still there
Without uttering a word
He will open the doors
To help you
And He will open your inner eyes
To see that
Mathirigi, 9-9-16, 2.55 pm.
As I was recalling both the songs 508 and 509, again reflecting the unique relationship between a mother and baby, I wrote this song.
511 அவன் அறிவான்
அழும் குரல்கேட்டால்
அன்னையும் பொறுப்பாளோ
அள்ளியே எடுத்துத்
தன்மீது வைக்காளோ
பசியென மதலையும்
சொல்லிட வேண்டுமோ
பதறியே பால்தந்து
பசிப்பிணி போக்காளோ
அறிவானே அவனும்
அதைவிட அதிகம்
அவசியம் வருவானே
ஏன்வீண் தயக்கம்
குரல்கூட உயர்த்திக்
கூப்பிட வேண்டாம்
குறைகளைச் சொல்லிக்
கதறிட வேண்டாம்
உன்நிலை அறிந்து
அவனடி செல்லு
ஒன்றும் பேசாது
மெளனமாய் நில்லு
உனக்கு உதவிட
வழியைத் திறப்பானே
உணர்ந்து கொள்ள உன்
அகக்கண் திறப்பானே
மத்திகிரி, 9-9-16, மதியம் 2.55