1013 என் கடமை
என்தேவை எதுவென
எனக்கெனத் தெரியும்
எந்நிலை அறிந்தபின்
உனக்குத்தான் புரியும்
எதுதந்த போதும்
ஏற்றிட வேண்டும்
என்பது ஒன்றுதான்
எனக்குமேத் தெரியும்
தன்தேவை அறியாத
பிள்ளையாய் இருந்தேன்
தாய்போல தேடிவந்து
நீயதைத் தந்தாய்
பெற்றபின் அறிந்தேன்
உண்மை நிலையை
புரிந்துமே கொண்டேன்
உனது அருளை
அன்று தொடங்கி
இன்று வரையில்
அனுதினம் வாழ்ந்தேன்
உனது நிழலில்
அந்தக் கருணை
என்றும் தொடர
என்றும் விலகேன்
உனது அடியை
உன்நிழல் தன்னில்
ஒதுங்கிய பின்னே
தேவை எதுவெனத்
தெரியவும் இல்லை
குறைவென்ற ஒன்று
இதுவரை இல்லை
அதனால் தேவையை
அறியவும் இல்லை
இனியென் தேவை
எதுவான போதும்
எனக்கென்ன கவலை
அதுபற்றி நாளும்
தருவதை ஏற்று
நிறைவுடன் வாழ்ந்து
உன்னுள்ளே நிலைப்பதே
எனக்குள்ள கடமை
மத்திகிரி, 17-11-2018, இரவு, 11.45