484 கரணம் கூற முடியாது
ஆசையாய் இருக்கு
அமைதியாய் இருக்க
ஆர்வமாய் இருக்கு
மறைந்துமே கிடக்க
காரணம் இருக்கு
நானிதை நாட
கடினமாய் இருக்கு
அதையுமே கூற
உலகத்தின் அவசரம்
ஒருபுறம் நெருக்குது
மனதின் ஏக்கமோ
மறுபுறம் கேட்குது
இரண்டுக்கும் இடையிலே
என்னதான் செய்வது
எதிர்பார்க்கும் விடுதலை
எப்போ கிடைப்பது
சென்றதை நினைக்கையில்
வேதனை மிஞ்சுது
வருவதை நினைக்கையில்
மனதுமோ கலங்குது
இரண்டுக்கும் இடையினில்
இந்நாள் வாழ்வுமோ
எதிர்பார்த்த படியா
எனக்குமே நடக்குது?
ஒருவித நெருக்கடி
அடிக்கடி வருகுது
எதையேனும் செய்து
தப்பிக்க நினைக்காது
விடைதேடி அலைந்து
வழிகாணும் போது
புதிய நெருக்கடி
முன்வந்து நிற்குது
ஒருநாளும் கிடைக்காத
விடுதலை எண்ணி
ஒருபோதும் கிடைக்காத
அமைதிக்காய் ஏங்கி
இல்லாத வழியில்
தப்பிக்க ஓடி
இறுதியில் உணர்ந்தேன்
வாழ்வினில் ஆடி
அதன்பின் கிடைத்தது
அந்த அமைதி
அதனுளே கிடைத்தது
இடமும் மறைந்திட
அதற்குள்ளே நானும்
சென்று ஒளிந்திட
அதற்கான காரணம்
எப்படிக் கூறிட
மத்திகிரி, 22-11-2018, இரவு, 11.15