586 This is my Praise
This is my praise (for you)
This is my prayer
Remembering you even for few seconds
Is my way (of doing sadhana?)
I don’t know to pray
By uttering many many words
I cannot sit patiently
And pray
Doing my regular works
Amidst it talking with you
As you too join me
We don’t know how the time goes
When I think about you
As some kind joy overflows
Immediately I will share with you
All the thoughts that come
When I think deeply
All the truthful words
Which you utter
I will take it as your will
When I praise you like this
Due to the immense joy that I found
Unable to say anything further
I will sit at your feet
Mathigiri, 3-12-16, 2.50 pm
After doing my regular reading, I used to spend few minutes in prayer. But as I have to rush to prepare Tiffin for my mother, I said to the Lord in prayer ‘that is all what I can do. All that I do and think are my prayers for you. And when I said this, as inspiration came, within three minutes I wrote this song as my prayer and got up to do my work. But I enjoy immensely that short period than spending long hours in prayer babbling so many words in the name of prayer.
….Augustine assures us it is in the silence of one’s inner thoughts where one prays that one can intimately and profoundly communicate all the words of this psalm {3} in silent prayer to God. — Bruce K. Waltke and James M. Houston, with Erika Moore, The Psalms As Christian Worship: A Historical Commentary, Grand Rapids, Michigan, William B. Eerdmans Publishing Company, 2010 p. 184
586 இதுதான் துதி
இதுதான் எனது துதியாகும்
இதுவே எனது ஜெபமாகும்
உன்னை நினைகும் சிலநொடிகள்
ஒன்றே எனது வழியாகும்
பொல பொலவெனப் பலவார்த்தை
சொல்லித் துதிக்கத் தெரியாது
பொறுமையாக அமர்ந்திருந்து
ஜெபமும் செய்ய இயலாது
எனது வேலைகள் செய்துகொண்டு
இடையே உன்னுடன் பேசிக்கொண்டு
நீயும் என்னுடன் சேர்ந்துகொள்ள
நேரம் போவது தெரியாது
உன்னை நினக்கும் போதினிலே
ஒருவித உவகை தலைக்கேற
உடனே தோன்றும் எண்ணங்களை
உன்னிடம் சொல்வேன் துதியாக
ஆழ்ந்து சிந்திக்கும் நேரத்திலே
அமைதியாக நீ சொல்லும்
சத்தியமான வார்த்தைகளை
அறிவேன் உனது சித்தமாக
இப்படியாகத் துதிக்கையிலே
எனக்குத் தோன்றும் மகிழ்ச்சியிலே
ஏதும் சொல்லத் தோன்றாமல்
இருப்பேன் உனது அடிகளிலே
மத்திகிரி, 3-12-16, 2.50 pm