621 should live like this
Seeking your lotus feet
early in this morning
singing remembering you
with a melted heart
seeking only you
in the life which I am living (now)
O charitable one
I come unto you
I looked back
All that went in the past days
O my god
I only saw your grace in it
Whatever might be the
Future too
I know for sure that
You will continue to do as before
There is no limit
For your grace
There is no explanation
For your compassion
There is no form
For my bhakti
There is no end
For our relationship
It is not that much easy
For me to comprehend this
I don’t have knowledge
Even to understand this
Even my senses failed to
Experience it
And I don’t have language
To express this
You alone came
Seeking after me
You overlord me
Filling my thoughts
It is enough for me to
Have this blessed status
And I should live
Like this always in you
20.3.2017, Dheradun. 6.30 am
The Dheradun bhaktas arranged my stay in the last four days in a beautiful service guest house with a kitchen and nice Mountain View in Rajpur. As it is between Missouri and Dheradun, the climate was very pleasant. I can also see Dheradun from the veranda. There was open terrace for me to go for my walk. Above all, realizing that I prefer to live alone without any one around me, they never came to stay here though there was extra bed room, I enjoyed my stay here.
As I got up and heard the voice of birds surrounded by nature and calmness, immediately my spirit also soared so high that as I thought about God’s grace and blessings that I enjoy each day in my life, I wrote this song worshipping Him.
621 இதுபோல் வாழவேண்டும்
காலைப் பொழுதில்
உன்மலரடி தேடி
கனிவுடன் உன்னை
நினைந்துமே பாடி
வாழும் வாழ்வில்
உன்னருள் நாடி
வள்ளலே வந்தேன்
உன்னையே தேடி
சென்ற நாட்களைத்
திரும்பியே பார்த்தேன்
தெய்வமே உந்தன்
கருணையைக் கண்டேன்
எதிர்காலம் கூட
எப்படி ஆயினும்
இன்றுபோல் என்றும்
தொடர்வாய் அறிந்தேன்
நீதரும் அருளுக்கு
எல்லையே இல்லை
நீகொண்ட கருணைக்கு
விளக்கமும் இல்லை
நான்கொண்ட பக்திக்கு
வடிவமே இல்லை
நாம்கொண்ட உறவுக்கு
முடிவுமே இல்லை
இதனைப் புரிவது
எளிதாக இல்லை
விளங்கிட எனக்கு
அறிவுமே இல்லை
உணர்வும் கூட
அறியவும் இல்லை
இதையும் கூற
மொழியுமே இல்லை
நீயே நாடி
என்னிடம் வந்தாய்
நினைவெல்லாம் நிறைந்து
எனையாள் கின்றாய்
இந்தப் பேறு
ஒன்றுமே போதும்
இதுபோல் உன்னில்
நான்வாழ வேண்டும்
டேராடூன், காலை, 20-3-2017, 6.30