69 Self praising
In this world full of wonder
In this funny life
I found out one truth
Which I failed to see so far
They will tell so many things about life
But never will keep them personally
They will talk freely about philosophy
But they will forget about it for themselves
They will find many good things
But not in other’s life
They will proclaim with much ‘humility’
That they alone have them in their life
When the lot is irritating their eye
Not realizing it properly
They will come enthusiastically
To remove the dust from other’s eye
But the will hate themselves
If they know truly about themselves
They will become really humble
If they realize the mask that they wear!
28-2-1996, Rewa, M. P.
When one person began to brag about all the good things he has in him which others lack, I was smiling within me, patiently listening him. As I began to reflect about it I wrote this song.
69 பொய்யான பெருமை
விந்தையான இந்த உலகினிலே
வேடிக்கையான இவ் வாழ்க்கையிலே
கண்டு கொண்டேன் ஒரு உண்மையினை
இதுவரை காணாதிருந்த நிலையினிலே
ஆயிரம் கூறுவார் வாழ்க்கையிலே
ஆனால் கைக்கொள்ளார் நடைமுறையில்
தத்துவம் பேசுவார் தாராளமாய்
தன்வரை அதையே மறந்திடுவார்
ஆயிரம் நற்குணம் கண்டிடுவார்
ஆனால் பிறரின் வாழ்வில் அல்ல
அவை அனைத்துமே தன்னிடம் உண்டு என
‘அடக்கமாய்’ பிறருக்கு அறிவிப்பார்
உத்திரம் கண்ணில் உறுத்தி நிற்க
உணராமல் அதை உள்ளபடி
ஊரார் கண்ணின் தூசியினை
நீக்கிட ஆவலாய் முநைந்து நிற்பார்
தன்னைத் தானே வெறுத்திடுவார்
‘தன்நிலை’ உள்ளபடி அறிந்திருந்தால்
போடுவதெல்லாம் வெளிவேடம்
இது புரிந்தால் என்றும் தாழ்ந்திருப்பார்
28-2-1996, Rewa, M. P.