Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 648

$
0
0

648 Later conditions

The later condition will become worst
The devil which left will come back
There is no point in having a superficial change
There is not life without having inner change

Due to initial enthusiasm
And due to over zeal
Taking so many quick decisions
There is no use falling at the end

We can say for others to applaud us
We can pretend before others
Not having real inner change
We will end up becoming good for nothing

Though we clean and remove all the dirt
And light a beautiful oil lamp at the centre of the house
Doing many decorations at the door step
There is no use living as before

Knowing the will of God
And having a simple bhakti
We should walk in straight and (narrow way)
And we should have clarity in our mind

Though fell, not accepting the defeat
Not wandering in unnecessary paths
We should repent seeking forgiveness
Should feel sorry with a true spirit

Having simplicity like a child
Remaining firm in the conviction
Standing till the end
We should attain God having bhakti within us

Mathigiri, 10-05-2017, 9.00 p.m. Matthew,12:45-46

After reading Matthew 12:45 ff. I began to meditate upon it thinking about my own life related in various areas where my later condition became worst than the former. As I began to reflect all the past several incidents in my life, I wrote this song. Initial enthusiasm and too much proclamation without having inner conviction will easily erode one’s mere intellectual understanding about anything in spirituality. This is one area in which reason cannot have the final say. Simple bhakti and having a child like faith alone save one.

648 பின்நிலை

பின்நிலை மோசமாய்ப் போய்விடுமே
போன பிசாசுமே வந்திடுமே
மேம்போக்காய் மாறியே பயனுமில்லை
உண்மையாய்த் திருந்தாமல் வாழ்வுமில்லை

ஆரம்ப காலத்தின் ஆர்வத்தாலே
அதிகப்படியான வேகத்திலே
ஏதேதோ தீர்மானம் செய்துவிட்டு
இறுதியில் வீழ்ந்த்தாலே பயனுமில்லை

பிறர்மெச்சப் பலபேச்சுப் பேசிடலாம்
பிறர்காண நன்றாக நடித்திடலாம்
உள்ளான மாறுதல் இல்லாமலே
ஒன்றுக்கும் உதவாமல் போயிடலாம்

குப்பை கூளங்கள் நீக்கினாலும்
கூடத்தில் விளக்குமே ஏற்றினாலும்
வாசலில் கோலங்கள் போட்டுவைத்தும்
வழக்கம்போல் வாழ்வதால் பயனுமில்லை

இறைவனின் சித்ததைப் புரிந்துகொண்டு
எளிதான பக்தியைத் தெரிந்து கொண்டு
சீரான பாதையில் சென்றிடணும்
சித்ததில் தெளிவுமே கொண்டிடணும்

வீழ்ந்தாலும் தோல்வியை ஏற்காமலே
வீணான பாதையில் போகாமலே
மன்னிப்புக் கேட்டுமே வந்திடணும்
மனதாறத் தவறுக்கு வருந்திடணும்

குழந்தைபோல் மனதிலே எளிமைகொண்டு
கொண்ட கொள்கையில் உறுதிகொண்டு
இறுதி வரையில் நிலைத்துநின்று
இறைவனை அடையணும் பக்திகொண்டு

மத்திகிரி, 10-05-2017, இரவு 9.00 மத்தேயு, 12:45-46


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles