489 ஆணும்தான் பாவாம்
என்னதான் செய்வான்
ஆண் மகனும்
இப்படி இடித்தால்
இருபுறமும்
சுயபுத்தி இல்லை
என்கிறாள் வந்தவள்
சொல்புத்தி இல்லை
என்கிறாள் பெற்றவள்
இருபுறம் அடிவாங்கும்
மத்தளம் ஆனான்
இருபுறம் இழுபட
பைத்தியம் ஆவான்
தப்பிக்க எத்தனை
எத்தனம் செய்யினும்
இறுதி வரையில்
சடுகுடு ஆடணும்
தலையணை மந்திரம்
கேட்கிறான் என்று
தாயும் ஒருபுறம்
தாக்கிடும் போது
தப்பனைப் போலவே
மகனை அடக்குறாள்
என்றே தாரம்
மறுபுறம் சொல்ல
தாரமாய் இருந்த
தாயோ ஒருபுறம்
தாயாய் ஆன
தாரம் மறுபுறம்
இதனைப் பார்த்து
சிரிக்கிறான் தகப்பனும்
இப்போ புரியுதா
என்கிறான் மகனிடம்
பெற்றவள் வந்தவள்
இடையில் மாட்டும்
ஆணும் விடுகிறான்
கண்ணீர் மறுபுறம்
ஆயிரம் சொல்லினும்
ஆணும்தான் பாவம்
அதனை ஏற்கும்
பெண்தான் காணோம்
மத்திகிரி, 16-12-18, இரவு, 11.30