86 there will be deliverance
Oh my mind don’t be troubled
Surely you will get deliverance
Though thousands of thoughts
Arise like wave in you
Like the wave
As it returns back after touching the shore
Touching the heart
Thoughts will become silent within you
Not troubled by the sound of the waves
Standing firmly
If you began to meditate
On the words of the mind
Oh my heart
You too will realize the true peace
Oh my heart what to say
As I know the truth
Mind and you are not two different entities
Though I know this truth
As my buddhi get confused
I babbled a bit
The confusion in the buddhi
Is nothing but
The echo of the soul
Which get disturbed?
Because of the sounds of the waves
Kekaraha, Rewa, M.P. 23-3-1997, 11.30 a.m.
Mind never remains at rest. Tossed by various thoughts, there is always unrest in the spirit. But which is the seat for this struggle—mind, heart or spirit (soul)? Who have analyzed it properly?
Kekaraha (Rewa), 23-3-97, 11-30 a.m.
86 விடுதலை உண்டு
உள்ளமே நீ கலங்காதே
உண்டு உனக்கு ஒரு விடுதலை
ஓயாத அலைபோல ஆயிரம்
எண்ணங்கள் உன்னில் தோன்றினும்
கரை மோதி மீண்டுமே
கடல் திரும்பு அலை போல
மனம் மோதி மீண்டுமே
மவுனமாகும் உன்னிலே
அலை போடும் இரைச்சலில்
அரண்டிடாமல் உறுதியாய்
மனம் கூறும் வார்த்தையை
மவுனமாக தியானித்தால்
உள்ளமே நீ உணருவாய்
உண்மையான அமைதியை
உள்ளமே என்ன கூறுவேன்
உள்ளபடி நான் அறிந்தவரை
மனம் வேறு நீ வேறல்ல
மதி மயங்கிய காரணத்தால்
உண்மையினை அறிந்தபின்னும்
உளறிவிட்டேன் வார்த்தையில்
மதிமயக்கம் என்பதும்
மனமே இங்கு வேறல்ல
அலைகள் போடும் இரைச்சலில்
அரண்டுவிட்ட ஆன்மாவின்
இருண்டுவிட்ட நிலையின்
எதிரொளி ஆகுமே
Kekaraha (Rewa), 23-3-97, 11-30 a.m.