758 Joining with Nature
This is a sweet morning
A time to praise you.
As nature too joins me
It is time to worship you.
Birds are singing
With sweet voice
The bees
Also fly with nice tunes.
The dragon flies
Go round praising you
Peacocks dance
Spreading their tail.
Creepers and plants
Rejoice by dancing
Flowers add
Smile to it
Clouds are
Moving gently
Grass is
Silently standing still
Waiting for
This occasion
The breeze also
Carries the scent
Joyfully the
Trees spread as umbrella
Birds and animals
Raise their voice in praising
Small stream
Flows gently
Water falls
Fall roaring loudly
Rivers went to
Join the ocean
Forest and mountain
Provide calmness
Those who walk
Crawl and fly
Along with those who swim
In deep water
Storm also
Along with volcano
Erupting by proclaiming
That we too are here
Joining with
Each part of nature
I too
Sing your praise.
Gurukulam, 1-10-2017, 7.௦௦ am.
Another beautiful morning here as the rain continued with gentle drizzle. When I went for my walking I enjoyed the climate, the nature around me and completely become one with the nature in worshiping the Lord. So when I wrote this song, I try to integrate as many parts of nature as possible to celebrate God’s gift through nature. I even included ocean, volcano, forest and mountains in it.
758 இயற்கையோடு இணைந்து
இனிதான காலை
துதித்திடும் வேளை
இயற்கையும் இணைய
போற்றிடும் வேளை
கீச்சுகீச்சு என
பறவைகள் ஒலிக்க
ரீங்காரமிட்டு
வண்டுகள் பறக்க
துதிபாடி தும்பிகள்
வட்டமும் அடிக்க
தோகையை விரித்து
மயில்களும் ஆட
ஆடி அசைந்து
செடிகொடி மகிழ
அத்துடன் பூக்கள்
புன்னகை சேர்க்க
மேகங்கள் மெதுவாய்
நகர்ந்துமே செல்ல
மவுனமாய் புற்கள்
மேனி சிலிர்க்க
தென்றலும் இதற்கென
காத்துக் கிடந்து
நாற்புறம் நறுமணம்
கொண்டுமே செல்ல
மரங்கள் மகிழ்வுடன்
குடைகள் பிடிக்க
பறவைகள் விலங்குகள்
வாழ்த்துக்கள் ஒளிக்க
சலசல எனசிறு
ஓடைகள் ஓட
ஆர்பரித் தருவிகள்
பாய்ந்து பெருக
நதிகள் கடலோடு
சங்கமம் ஆக
காடுகள் மலைகள்
அமைதி கொடுக்க
ஊர்வன நடப்பான
பறப்பன மற்றும்
நீரின் ஆழத்தில்
நீந்ததிடும் யாவும்
எரிமலை யோடு
புயலும் சீறி
நாங்களும் இருக்கோம்
என்றுமே சொல்ல
இயற்கையின் ஒவ்வொரு
அசைவும் இசைக்க
இணைந்தேன் நானும்
உன்னைத் துதிக்க
குருகுலம், 1-10-2017, காலை, 7.௦௦