492 இழப்பது நல்லது
இழப்பதெற்கென்று
ஏதுமே இல்லை
நமெக்கென்று ஒன்று
இல்லாத போது
இழந்திடத் தேவை
என்றுமே இல்லை
முன்னமே ஒன்றை
பெறாத போது
இழப்பதாக நாம்
எண்ணுவா தெல்லாம்
எவரோ நமக்குத்
தந்தது என்று
விளங்கிடும் போது
இழந்தாலும் கூட
அதனால் நமக்கு
கவலை வராது
பெற்றோர் தந்தது
நம்மிந்த தேகம்
உற்றார் தந்தது
நமதென்ற எண்ணம்
உலகம் தந்தது
நம்மிந்த வாழ்க்கை
உயிரைத் தந்தது
இறைவனின் ஈகை
இதிலே நமது
எதுவெனச் சொல்வது
ஏதுமே நமதாக
இல்லாத போது
இழக்காமல் ஒன்றை
இறுதி வரையில்
நிறுத்தி வைக்க
எவருக்கும் இயலாது
இழந்ததை எல்லாம்
எண்ணத் தொடங்க
அதற்கான இலக்கம்
நம்மிடம் கிடையாது
இழந்த வற்றை
எண்ணினாலும்
இறுதி வரையில்
நிம்மதி கிடைக்காது
இழந்ததும் ஒருவிதம்
நல்லது என்ற
எண்ணம் நமக்கு
வந்திடும் போது
இழப்பத்தில் உள்ள
நன்மைகள் கூட
மெதுவாக நமக்குப்
புரியும் அப்போது
சேர்ப்பதில் உள்ள
சுமைகளும் நீங்க
உள்ளான விடுதலை
கிடைப்பதினாலே
இழந்தே பெறுவோம்
அந்த ஒன்றை
என்றுமே இழகக்கக்
கூடாத ஒன்றை
மத்திகிரி, 8-1-2019, இரவு 10.10