தேவையானவை: பச்சை பட்டாணி, கேரட், காலி பிளவர், குடை மிளகாய் (கேப்ஸிகன்), முள்ளங்கி, இஞ்ஜி, பச்சை மிளக்காய், பூண்டு (விருப்பம் இருந்தால்), பச்சை கொண்டைக் கடலை (வட இந்தியாவில் கிடைக்கும்)
கடுகு, எண்ணை, மிளகாய்த்தூள், மச்சள் தூள், வெந்தயப் பொடி, பெருங்காயம் பொடி, உப்பு
எலுமிச்சம், அல்லது, மாங்க்காய்த் தூள், அல்லது, நெல்லிப் பொடி
இயற்கை முறை
எல்லா காய்களையும் அலம்பி, தண்ணீர் இல்லாமல் சுத்தமான துணியால் துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்,
அதில் தேவையான உப்பு போட்டு, எலுமிச்சம் சாற்றை (கொட்டை இல்லாமல்) ஊற்றி, (மாங்காய்த்தூள் அல்லது நெல்லிக்காய்த் தூள் இருந்தாலும் போடலாம்). மஞ்சள் தூள், வெந்த்தயப் பொடி, பெருங்க்காயப் பொடியைத் தூவி, தேவையான எண்ணையில் கடுகை வெடிக்க விட்டு எல்லாவற்றையும் நன்றாகக் கிளறவும். இவற்றை எவர் சில்வர் பாத்திரத்தில் போட்டு இரண்டு நாட்கள் வெய்யிலில் வைக்கவேண்டும். அதிகம் வைக்க வேண்டம்.
பிறகு தேவைப்பட்டால் மேற்கொண்டு, உப்பு, மிளகாய்ப் பொடி, எலுமிச்ச சாறு ஊற்றி ஒரு பாட்டில்போட்டு மேற்கொண்டு எண்ணை விட்டு வைக்கவும். இதை பிரிஜில் தான் வைக்க வேண்டும். ஒரு மாதத்திற்குமேல் இது வீணாகி விடும்
செயற்கை முறை:
வெயிலில் வைக்க இடம், நேரம் மற்றும் சோம்பேறிகள் செயற்கை முறையில் உடனடியாக செய்யலாம். ஆனால் இது இரண்டு வாரத்திற்கு மேல் இருக்காது.
எண்ணையை காய்ச்சி கடுகை வெடிக்க விட்டு அதில் நறுக்கிய எல்லா காய்கறிகளையும் போட்டு 5 நிமிடங்க்கள் வேகவைக்கவும். எக்காரணம் கொண்டு இலுப்பை சட்டியை மூடக்கூடாது. பிறகு மஞ்ச்சள் தூள், மிளகாய்த்தூள் (தேவைப்பட்டால்), வெந்தயத்தூள், பெருங்காயத்தூள் போட்டு, நன்றாக ஆறிய பிறகு எலுமிச்ச சாற்றை ஊற்றி உபயோகப் படுத்தவும்.
சக்கரை வள்ளிக் கிழங்க்கு பாயசம்
சக்கரை வள்ளிக் கிழங்கை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து, தோலை உறித்து அத்துடன் ஆப்பிள், வாழைப்பழம், பேரீச்சம் பழம், சேர்த்து பாலில் வேகவைத்து, வழக்கம்போல் பாயசம் செய்யவும், இறக்கி வைக்கும்போது ஒரு ஸ்பூன் திரட்டுப் பால் அல்லது தித்திப்பு கோயா அல்லது கண்டன்ஸ் பால் சேர்த்து பரிமாறவும். விருப்பம் இருந்தால் மாதுளம் பழத்தையும் சேர்க்கலாம். இதை ஆறவைத்து பிரிஜில் வைத்து குளிராகவும் பறிமாறலாம்