Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 797

$
0
0

797 Lead me like this

Teach me every day
What I should do
Don’t stand by thinking
That let me do on my own strength

You know the reason for this
You know my limitation
I know only to do what I am instructed
I never trust my own strength

You have only done this so far
You carried me so far in life
You always stood with me
You accomplished everything standing with me

When I have done on my own
I incurred so many losses
When I have done as you instructed
Everything went well

I have seen this with my own eyes
How much peace I received in it
That is why I come again seeking this
I request you to lead like this.

Mathigiri, 9-1-18, 2.20 pm.

Does god involve in everyday life of a bhakta? Yes and no is my response. When I live a normal bhakti life, each day goes as I live. When I complicate it with my own agenda and temperament, then the very same day becomes more complicated. On crucial issues I need to wait and pray for God’s guidance and grace. But I need not bother god for each and every yawning and sneezing in a day. One of my favourite quotes is: God won’t do our part and we cannot do God’s part. And when I live accordingly the peace of God guides and controls even the normal part of my life.

797 இதுபோல நடத்திடு

நான்னென்ன செய்யட்டும் என்று
நாள்தோறும் சொல்லியே தருவாய்
நானாகச் செய்யட்டும் என்று
தள்ளியே ஒருபோதும் நில்லாய்

ஏனென்று உனக்குமே தெரியும்
என்எல்லையும் உனக்குமே புரியும்
சொன்னதைச் செய்யவே அறிவேன்
சொந்த பெலத்தை நம்பேன்

இதுவரை அதைத்தானே செய்தாய்
ஏந்தியே அழைதுமே வந்தாய்
எப்போதும் கூடவே நின்றாய்
இணைந்துமே எல்லாமும் செய்தாய்

நானாகச் செய்திட்ட போது
நட்டங்கள் ஏராளம் வந்தது
நீசொல்ல நான்செய்த போது
எல்லாமே நன்மையாய் ஆனது

இதையுமே கண்கூடாய்க் கண்டேன்
எத்தனை அமைதியும் கொண்டேன்
எனவேதான் வேண்டியே வந்தேன்
இதுபோல நடத்திடு என்றேன்.

மத்திகிரி, 9-1-18, மதியம் 2.20


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles