806 I will praise you with bhakti
I should sing everyday about you
I should tell all the good things that you do
I should seek your through them
I should rejoice in living for you
As I sing praising you, divine presence will be there
As I praise grace will increase more and more
As I praise you, the chanchal (frustration) will go away
And the divine peace will prevail in mind
In this worldly life where there is constant struggle
In the situation where there is continuous lamentation
When I think about your grace
My tongue wants to sing and praise you
When unnecessary thoughts corner my mind
In order to get release from it writing something nonsense
By writing un-useful songs
When I defame bhakti
Helping me to remember the greatness of bhakti
Helping me to walk in the path of bhakti
Giving your grace to live as your bhakta
You made me to praise you by singing new songs
Therefore writing this song again
Making it as my praises
By this increasing your grace more and more
I reached your Holy feet with a melted heart.
Mathigiri, 22-1-18, 11.30 p.m.
After another regular day as I sat quietly at the feet of the Lord recalling the life that went to day, I recalled so many unnecessary thoughts, words and deeds which I have done as part of my routine life. Often the thought that comes in my mind was, ‘I could have spent the time in a better and useful way’. As the routine life demands its own way life, when I evolve each day of my life; I feel that I have wasted much of my time than in useful way. However, in spite of all that comparison, the few seconds or minutes that I spent with Him compensate all that loss and fills my heart and mind with thanks giving and gratitude for the Lord. All the credit goes to bhakti which often helps me to pull me back my life in the Lord. As I was meditating this I wrote this song as my prayer for this day.
806 பக்தியால் துதிப்பேன்
நாள்தோறும் நானுன்னைப் பாடிட வேண்டும்
நீசெய்யும் நன்மையைச் சொல்லிட வேண்டும்
உன்சித்தம் அப்போது நான்தேட வேண்டும்
உனக்காக வாழ்வதில் மகிழ்ந்திட வேண்டும்
துதித்துன்னைப் பாடிட தெய்வீகம் கமழும்
துதித்திடக் கிருபையும் மென்மேலும் பெருகும்
துதிப்பதால் மனதிலே சஞ்சலம் மறையும்
தெய்வீக அமைதி சிந்தையில் நிறையும்
ஓய்வின்றி போராடும் உலகிடை வாழ்வில்
ஓயாமல் புலம்பி அழுதிடும் நிலையில்
உன்னருள் தன்னையே நினைத்திடும் போது
உனைப்போற்றி பாடத்தான் விரும்புது நாவு
வீணான எண்ணங்கள் சிந்தையை நெருக்கி
விடுதலைப் பெறவேண்டி எதையேனும் கிறுக்கி
பயனற்ற பாடல்கள் வீணாக எழுதி
பக்திக்கு அவதூறு செய்கின்ற போது
பக்தியின் மேன்மையை உணர்ந்திடச் செய்து
பக்தியின் பாதையில் நடந்திட வைத்து
பக்தனாய் வாழ்ந்திட அருளுமே அளித்து
பாடல்கள் புனைந்து துதித்திட வைத்தாய்
அந்தனாலே மீண்டும் இப்பாடல் எழுதி
அதைஎன் துதியாக்கி நானுனைப் போற்றி
அதன்மூலம் கிருபையை மென்மேலும் பெருக்கி
அடைந்தேனே திருவடி மனதார உருகி
மத்திகிரி, 22-1-18, இரவு 11.30