1044 முதலுக்கே மோசம்
இன்றைய நாளுக்கு
இதுமட்டும் போதும்
எதற்காக நாளைய
கவலையும் வேண்டும்
என்றுமே எளிதாய்நீ
சொல்லிய போதும்
அதுமட்டும் புத்தியில்
ஏறவே காணோம்
எத்தனை உறுதியாய்
நீயதைச் சொன்னாய்
உவமைகள் பலப்பல
எடுத்துமே சொன்னாய்
படிக்கின்ற போது
புரிகின்ற ஒன்று
வாழ்ந்திடும் போது
ஏனோ மறக்குது
அதற்கும் காரணம்
பலப்பல இருக்கு
அவற்றால் என்ன
பயனுமே இருக்கு
ஆயிரம் காரணம்
சொல்லிய போதும்
அவையாவும் வீணான
சாக்குப் போக்கு
கவலைப் படாமல்
இருப்பது எப்படி
என்பதே பெரிய
கவலையாய் இருக்கு
முதலுக்கே மோசம்
என்றான பின்னே
மற்றதை சொல்லிப்
பயனுமே என்ன
ஆகவே முதலில்
கவலையைப் போக்க
வழியென்ன வென்று
எனக்குமே சொல்லு
அதன்பின் இன்றைய
நாளைய பற்றி
எவையென நானும்
யோசிக்க முடியும்
மத்திகிரி, 17-1-2019, இரவு, மத்தேயு. 7.24-34. 11.00