495 நம்மோடு போகணும்
எதுவானாலும்
என்னோடு போனது
இதுவும் கூட
எனக்குமே நல்லது
எதற்காகப் பிறருக்கு
வருத்தமும் தரணும்
எனக்காக வேண்டி
பிறர்துயர் படணும்
அவசர கதியிலே
உலகமும் போகுது
அவரவர் வாழ்வே
பாரமும் ஆகுது
பிறருக்கு உதவ
எண்ணியும் கூட
அதற்கான நேரம்
எங்கே இருக்குது
குடும்ப பாரம்
ஒருபுறம் சுமக்க
கூடவே பலரும்
நெருக்கடி அளிக்க
தனக்கென வாழ
நேரமும் இன்றி
பிறருக்காய் வாழ
வழியுமே இன்றி
அறைபடும் கரும்பாய்
அவர்நிலை மாற
இதிலே எங்கே
உதவியை நாட
அரைத்த கரும்பின்
சாரை எடுத்து
சக்கையை எரித்து
வெல்லமும் எடுத்து
பிறரது நாவுக்கு
இனிப்பை கொடுக்கும்
கரும்பின் நிலையில்
பலரும் இருக்க
முடிந்த வரையில்
பாரம் தராமல்
மிஞ்சிய வாழ்வை
வாழ்ந்து முடிக்க
எதுவானாலும்
நம்மோடு போகணும்
இயன்றவரையில்
பாரத்தை சுமக்கணும்
20-1-2019, 11.30