1045 அதிகம் ஆடாதே
உள்ளமே நீயும்
துள்ளி விடாதே
உனக்குத்தான் தெரியும்
என எண்ணிவிடாதே
உன்னிலும் வல்லவன்
எண்ணத்தில் இருக்கிறான்
உன்னையும் வெல்ல
நல்லருள் தருவான்
உன்னோடு போராடி
ஓய்ந்துமே போனாலும்
ஒருநாளும் உனக்கு
அடிமையே ஆகேன்
உன்னிலும் வல்லவன்
என்னுள் இருக்கையில்
ஒருநாளும் தோல்வியை
ஏற்கவே மாட்டேன்
உனக்கென நேரமோ
ஒதுக்கவே இல்லை
உன்னோடு பேசிட
நான் வரவில்லை
ஆயினும் நீயாக
வம்புக்கு வருகிறாய்
அடிக்கடிப் பேசியே
தொலையும் தருகிறாய்
செவிட்டாய் ஊமையாய்
இருந்துதான் பார்க்கிறேன்
தப்பித்து ஓடிட
வழிவகைத் தேடுறேன்
ஒதுக்கித் தள்ளியே
உன்னையும் வைக்கிறேன்
ஆயினும் பயனில்லை
என்பதை அறிகிறேன்
அதனாலே மீண்டுமே
அதிகமாய் ஆடுறாய்
அடங்கிட மறுத்துமே
ஏளனம் செய்கிறாய்
எதுவரை போவாய்
என்பதைப் பார்க்கிறேன்
இதற்கு மாற்றொன்று
நிச்சயம் காண்கிறேன்
என்னையே மீட்டவன்
தந்திடும் வல்லமை
என்னுள் இருக்கையில்
வென்றுமே காட்டுறேன்
மத்திகிரி, 22-1-2-19, இரவு, 11.10