836 I cannot understand the secret
You unloaded
Which
I thought
As a burden
You gave
Patience
When I do
Things with much haste
When I get frustrated
With much confusion
By removing it
You gave clarity
When anger and irritation
Are boiling within
Putting down both
You gave peace of mind
When emptiness
Occupies within me
You filling my mind
You gave satisfaction
But when I ask
‘Why any more to live’
You refuse to give
Answer to that
Removing the burden
Keeping away haste
Removing confusion
Though you gave peace
Till you keep me
On this earth
Some kind of emptiness
Will be within me
Only when I come
And reach you
I can find an
Everlasting satisfaction
Till then
There is no alternative
To live
By carrying this burden
As you know this well
The reason for your silence
Is the secret
Which I cannot understand
Mathigiri, 26-2-18, 10.50௦ p.m.
The longing every old person to go away when they can manage on their own. The fear of living long depending upon others is an old age anxiety. As I too have that, though I ask the Lord ‘how long’ there is no answer from him. When he gives answer to so many other issues, this one he refuse to disclose.
836 இரகசியம் புரியலை
பாரமாய் எனக்கு
தோன்றிய ஒன்றை
எளிதாக்கி நீயுமே
இறக்கியே வைத்தாய்
பதறியே நானும்
செய்திடும் போது
பதட்டத்தை நீக்கி
பொறுமையைத் தந்தாய்
தெளிவற்று குழம்பி
தவித்திடும் போது
குழப்பத்தைப் போக்கி
தெளிவினைத் தந்தாய்
எரிச்சலும் கோபமும்
தகித்திடும் போது
இரண்டையும் தணித்து
அமைதியும் தந்தாய்
எனக்குள்ளே வெறுமை
பரவிடும் போது
நிறைவினைத் தந்து
நிம்மதி அளித்தாய்
“இன்னமும் எதற்கு”
என்றுமே கேட்டால்
அதற்கு பதில்தர
நீயுமே மறுத்தாய்
பாரத்தைப் போக்கி
பதட்டத்தை நீக்கி
குழப்பத்தை போக்கி
அமைதியைத் தந்தும்
உலகினில் என்னை
வைத்திடும் வரையில்
ஒருவித வெறுமை
எனக்குள் இருக்கும்
உன்னிடம் வந்து
சேர்ந்திட்ட பின்னே
நிரந்தரமான ஒரு
நிறைவுமே கிடைக்கும்
அதுவரை இந்த
பாரத்தைச் சுமது
வாழ்வது அன்றி
வழியெனக் கில்லை
அதனை அறிந்தும்நீ
அமைதியாய் இருப்பதின்
இரகசியம் மட்டும்
புரியவும் இல்லை
மத்திகிரி, 26-2-18, இரவு 10.50௦