Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 918

$
0
0

918 this is enough

I was waiting
For this day to come
I was waiting to receive
Your sweet words

Knowing my heart
You came quickly
By saving my life
You gave your grace

I was confused
Seeing the
Illusion of
This human life

But in it
By giving your protection
I saw that you are
Leading my life

This life
Is not waste
By telling this truth
You redeemed me

Seeing the life
Which I receive from you
I realized the essence
Of real life

Only thinking about it
In each day
I celebrate you
Both in and out everyday

By that
Removing the doubts
I realized the
Nature of life in you

I was waiting
For this kind of life
To live
Only in you

As you ask me
To count all the days you gave so far
Saying that ‘this is enough’
I bowed at your feet

Mathigiri, 9-7-2018, 5.30௦ a.m.

As I got up very early in the morning, I got another opportunity to sit at the feet of the Lord (instead of working in computer). That time I thought about the kind of life which the Lord showed me and gave me to realize the real purpose of it. As I enjoy such a life each day in him, thanking him I worshiped through this song.

918 இதுபோதும்

இந்தநாள் வரவேண்டி
பார்த்துமே கிடந்தேன்
இனியசொல் பெறவேண்டி
காத்துமே கிடந்தேன்

என்னுள்ளம் அறிந்தநீ
விரைந்துமே வந்தாய்
ஏழையென் உயிர்மீட்டு
அருளுமே தந்தாய்

மானிட வாழ்வின்
மாயைகள் கண்டு
மனம்கலங்கி நானும்
மயக்கமே கொண்டேன்

ஆயினும் அவையிடை
ஆதரவு தந்துநீ
ஆட்கொண்டு என்னை
வழிநடத்தக் கண்டேன்

வீணில்லை இந்தப்
பிறவியும் என்ற
உண்மையைச் சொல்லிநீ
உய்வித்துக் காத்தாய்

உன்மூலம் நான்பெற்ற
வாழ்வினைக் கண்டும்
உண்மையில் வாழ்வின்
தன்மையை உணர்ந்தேன்

அதையே எண்ணிநான்
அனுதினம் உன்னையே
அகத்திலும் புறத்திலும்
கொண்டாடி மகிழ்ந்தேன்

அதன்மூலம் ஐயனே
ஐயமும் நீங்கியே
வாழ்க்கையின் தன்மையை
உன்னிலே உணர்ந்தேன்

இதுபோலே ஒவ்வொரு
நாளுமே வாழ்ந்திடும்
வாழ்வுமே வந்திட
காத்துமே கிடந்தேன்

இதுவரைத் தந்ததை
எண்ணிட நீசொல்ல
இதுபோதும் என்று
உன்னடிப் பணிந்தேன்

மத்திகிரி, 9-7-2018, காலை 5.30௦


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles