919 Your divine nature
This is your divine nature
I should worship you by proclaiming this
You came to this simple one
I should have gratitude for this in me
Whichever the bliss
Which the world says that
It is beyond comprehension
I should receive it in you
Your Veda
In which you shared in crystal clear
Should teach it slowly
That in me
On the one side the Veda talks about it
On the other side your Spirit helps me
As the true bhaktas joined me
I realized that great bliss
Body won’t realize it through its senses
Even the heart won’t understand it
No philosophy can talk about it
And the mind also cannot explain it
As you pour your Spirit
As my spirit fills in it
As the silence helps me to understand it
My heart will rejoice in it
That bliss which remains permanent
Will dwell within me every day
That alone is the true divinity
You bestow it every day.
Mathigiri, 9-7-2018, 5.45 a.m.
After writing the previous song, as the inspiration continued rejoicing in the bliss that he gives, I wrote this song to continue to worship him.
919 உனது தெய்வீகம்
இதுதான் உனது தெய்வீகம்
இதைநான் சொல்லித் தொழவேண்டும்
எளியவன் என்னிடம் நீவந்தாய்
இதற்கு நன்றி எனில்வேண்டும்
உணர முடியாப் பேரின்பம்
உலகில் ஒன்று உண்டென்று
உலகோர் எதையே சொன்னாலும்
உன்னில் அதையே பெறவேண்டும்
தெள்ளத் தெளிவாய் நீசொன்ன
உனது வேத வார்த்தைகளும்
மெல்ல மெல்ல என்னுள்ளே
அதையே சொல்லித் தரவேண்டும்
ஒருபுறம் வேதம் அதைக்கூற
உனது ஆவியும் துணைபுரிய
உண்மை பக்தர்கள் துணைசேர
உணர்ந்தேன் அந்தப் பேரின்பம்
உடலின் உணர்ச்சிக்குத் தெரியாது
உள்ளமும் அதையே புரியாது
தத்துவம் ஏதுமே உரைக்காது
சித்தமும் நன்கு விளங்காது
உனது ஆவியை நீயூற்ற
எனது ஆவியும் அதில்நிறைய
மவுனமும் உள்ளே எடுத்துரைக்க
மனமும் அங்கே மகிழ்ந்தாடும்
நிலைத்து நிற்கும் அவ்வின்பம்
நித்தமும் என்னுள் நிறைந்திருக்க
அதுதான் உண்மைத் தெய்வீகம்
அதைநீ அருள்வாய் அனுதினமும்
மத்திகிரி, 9-7-2018, காலை 5.45