Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 115

$
0
0

115. Accomplished everything

I constructed the fort
And ruled like a Queen
I accumulated millions
For the world to wonder

I lived a life in a palace
For others to watch
I enjoyed life with relatives
For others to wonder

Selecting one by one
I almost bought the entire village
If there was left anything
That too is purchased

I have seen cattle and big house
I got children and grand children
I had many relatives and friends
And I lived a luxurious life

I over lorded others
Even for the enemy to bow before me
I helped the poor and need
As much as possible

Now old age has come
Become crippled and lay on a mat
I find it difficult
Even to properly to breath

So many people were there
To surround me to serve (before)
But now as I lay down on a mat
All of them flee away

There is no point of blaming anyone
As this become the habit of this world
Somehow they give some food for me
And that is enough now

I merely count the days
For the Yama to come and call me
What is the use of sharing more?
Therefore I stop here

Gurukulam, 1-4-2014, 6.30, a.m.

When I watched my mother laying down on her cot due to old age, I called back her busy life in which she actively lived and served us all. As I compared that life and reflected the present reality, I wrote this song as her mind voice.

115. எல்லாமாச்சு

கொடி கட்டி ஆண்டாச்சு
கோட்ட கட்டி பாத்தாச்சு
குவலயமே வியக்கும் படி
கோடி கோடி சேத்தாச்சு

உப்பரிகையில் ஏறி நின்னு
ஊருபாக்க வாழ்ந்தாச்சு
ஊரு உலகம் வியக்கும்படி
உறவோடு மகிழ்ந்தாச்சு

ஒவ்வொண்ணா எண்ணி எண்ணி
ஊர வளச்சுப் போட்டாச்சு
மிச்சம் மீதி ஏதுமிருந்தா
அதையும் கூட வாங்கியாச்சு

மாடு மனை பார்த்தாச்சு
மக்கள் பேரன் எடுத்தாச்சு
சொந்தம், நண்பர் பார்த்தாச்சு
சொகுசாக வாழ்ந்தாச்சு

எதிரிகூடப் பணியும் படி
ஏற்றம் கொண்டு ஆண்டாச்சு
ஏழை எளிய மக்களுக்கு
இயன்ற உதவி செஞ்சாச்சு

முதுமை இன்று வந்தாச்சு
முடங்கிப் பாயில் படுத்தாச்சு
மூச்சுமட்டும் ஏறி இறங்க
மூலையிலே கிடந்தாச்சு

என்னச் சுத்தி எதனபேர்
பணிஞ்சு சேவசெஞ்சாச்சு
பாயில் முடங்கிப் படுத்தபின்னே
பறந்து எங்கோ போயாச்சு

யாரச்சொல்லி குத்தமில்ல
இது உலக வழக்கமாச்சு
ஏதோ கஞ்சி ஊத்தராங்க
இப்ப இது போதுமாச்சு

நடுவன் வந்து அழைக்கும்வரை
நாளை எண்ணிக் கழிக்கிறேன்
இதுக்குமேல சொல்லி என்ன?
இத்தோட கத முடிக்கிறேன்.

1-4-2014 காலை, 6.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles