924 No more complains
I clearly realize
My short comings
But my heart
Refuses to accept it
Though you’re Spirit
Clearly points it
My spirit
Refuse to listen to it
Pride like a killer
Went in my head
Along with as the ego
Makes me to become blind
As my spirit stumbles
Because of these deceases
I live like a
Dead person each day
You didn’t give me
Any treatment for this
Your comfort didn’t come
To console my atman
There is no aim
For me to repent on my own
There is no hope of cure
Unless you redeem me
Though you
Further delay
I don’t have the right
To question you about it
But though I walk
Through such darkness
You never forgot
To give your staff for me to walk
Therefore as long as
This sickness remains
Finally you will cure me
That I cannot deny
Though I live
With this sickness everyday
Oh my Lord
I have no complain against you
Mathigiri, 7-7-2018, 11.00௦௦ p.m.
Several times God remains silent not answer our prayers. Though we feel frustrated, still we can realize that even amidst the dark night of the soul, the hand of god leading us. So there is no point of complaining that god is not answering our prayers.
924 குறையீடு இல்லை
என்குறை எனக்குமே
தெளிவாகத் தெரியுது
ஆயினும் அதையேற்க
என்மனம் மறுக்குது
இதனிடை உன்னாவி
எடுத்துமே சொல்லினும்
என்னாவி அதைகேட்க
ஏனோ மறுக்குது
ஆட்கொல்லி நோயாக
ஆணவம் தலைக்கேற
அத்துடன் அகங்காரம்
மனதையும் குருடாக்க
நோயினால் என்னாவி
நாள்தோறும் தடுமாற
நானுமே வாழ்கிறேன்
நடமாடும் பிணமாக
மருந்தென்று நீயொன்று
இதுவரைத் தரவில்லை
மனநோய்க்கு மருந்தாக
ஆறுதல் வரவில்லை
நானாகத் திருந்திடும்
நோக்கம் எனக்கில்லை
நீயாக மீட்காமல்
சுகம்பெற வழியில்லை
தாமதம் நீசெய்ய
காரணம் இருந்தாலும்
ஏனென்று நான்கேட்க
உரிமை எனக்கில்லை
ஆயினும் இதுபோன்ற
இருளூடே நடக்கையில்
கைத்தடி நீதர
ஒருபோதும் மறுக்கலை
அதனாலே எதுவரை
இந்நோய் இருந்தாலும்
இறுதியில் கரைசேர்ப்பாய்
என்பதை மறக்கலை
அதனாலே நோவுடன்
அனுதினம் வாழினும்
ஐயனே முறையீடு
உன்மீது எனக்கில்லை
மத்திகிரி, 17-7-2018, இரவு 11.00௦௦