925 Your answer
You take care of me
More than a mother
You give grace
No seeing my qualification
You make my life
As blessed one
You give the boon
To sing your praises
Whether the trials come
On their own
Or I got them
Seeking on my own
You keep an
Answer for that
Whether I accept or reject
You do accordingly
I realized this
In everyday life
Therefore I feel
Redeemed in you
Then I came to
Your holy feet
There I experienced it
Deep in my heart
Whatever might be?
Your grace is enough
What else I require
More than this?
How long
Will I live?
I should live
Like this
Mathigiri, 19-7-2018, 11.30 p.m.
Trials are inevitable in life—whether they come on their own or I seek on my own. But god has a definite answer for them. And he will act how I accept or reject. I like such a god who gives my freedom and space and then to come to his feet to respond. I feel blessed to found such guru in Muktinath.
925 உனது விடை
தாயினும் மேலாய்
தாங்கியே அணைக்கிறாய்
தகுதியைப் பாராமல்
கிருபையை கொடுக்கிறாய்
வாழ்ந்திடும் வாழ்வை
வளமுடன் வைக்கிறாய்
வாழ்த்தியே பாடிட
வரமுமே அளிக்கிறாய்
தன்போல் சோதனை
தேடியே வந்தாலும்
நானாய்த் தேடி
அதை அடைந்தாலும்
விடையென ஒன்றை
நீயுமே வைக்கிறாய்
ஏற்கினும் மறுக்கினும்
அதன்படி செய்கிறாய்
அதனை உணர்ந்தேன்
அனுதின வாழ்வில்
அதனால் உய்ந்தேன்
ஐயனே உன்னில்
அதன்பின் வந்தேன்
திருவடி தன்னில்
அங்குமே அறிந்தேன்
ஆழமாய் மனதில்
எதுவான போதும்
உன்னருள் போதும்
இதனினும் பேறு
வேறெது வேண்டும்
எதுவரை வாழிணும்
இதுபோல் வாழணும்
இதையே சொல்லி
உன்னடி பணியணும்
மத்திகிரி, 19-7-2018, இரவு, 11.30