Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 116

$
0
0

116. This is the reality

No more strength in the body
No more courage in the heart
There is no company
To struggle in life with courage

Did we come alone?
Are we going together?
We lived in between
Like a dust on the wave

Time has united
Ideology has separated
Make us to join sometimes
And get separated several times

Whoever comes let them come?
Whoever goes let them go?
Let us do
What is possible by us?

Joined together, it is relationship
If go away that is separation
This is reality
In life

Don’t refuse if come
Don’t stop if go
But don’t merely watch
When others fall

If possible, help
Otherwise keep away
Bless from your heart
For everyone to live

This is possible
Now in life
What can one do?
In old age?

Mathigiri, 30-07-2014, 5.30

Old age not only brings limitation in our life but also brings limitation in our relationship with others. We cannot do more than what we can do. No idealism works, but realism alone will work.

116. இதுதான் உண்மை

தெம்பில்லை உடலில்
துணிவில்லை மனதில்
துணிந்து போராட
துணைஇல்லை வாழ்வில்

தனித்தா வந்தோம்
சேர்ந்தா போவோம்
அலையில் துரும்பாய்
இடையில் வாழ்ந்தோம்

காலம் இணைக்க
கொள்கை பிரிக்க
சிலமுறை சேர்ந்து
பலமுறை பிரிந்தோம்

வருவோர் வரட்டும்
போவோர் போகட்டும்
நம்மால் முடிந்ததை
செய்து பார்ப்போம்

வந்தால் உறவு
சென்றால் பிரிவு
இதுதான் உண்மை
வாழ்வில் இங்கு

வந்தால் மறுக்காதே
சென்றால் தடுக்காதே
வீழ்ந்திட மட்டும்
வேடிக்கை பார்க்காதே

முடிந்தால் உதவு
இல்லையேல் ஒதுங்கு
எல்லோரும் வாழ
மனதாற வாழ்த்து

இதுதான் முடியும்
இந்த நிலையில்
வேறென்ன செய்ய
முதுமை வாழ்வில்.

30-07-2014, மத்திகிரி, காலை, 5.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles