Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 934

$
0
0

934 Nothing to tell

I came to tell
To you
But before telling it
I forgot it

When I thought
Which one to share and which one to leave
Another thought came that
Why should even I tell you?

Don’t you know?
All my thoughts
Once you know them
Why should I even tell you?

As you know
To give even before we ask
Don’t you know?
What is my heart desire?

But you alone
Told us to ask
And often to come
To knock

As we will find
Once we seek
I do the same
As you told by you

As I have done
As you told
Still I thought
What I shared with you

As I told you that
I have nothing to tell you
I began to laugh
Only thinking that

As you too began to laugh
Joining me
Filled in my heart
I bowed at your feet

Mathigiri, 1-8-2018, 11.30 p.m.

A song of intimate fellowship with the Lord where I need not even tell anything to him. As he knows even before I ask I need not even give a long list of my need. As usual my English translation won’t bring the true spirit of the song in Tamil.

934 ஒன்றுமில்லை சொல்ல

சொல்லிட வந்தேன்
உன்னிடம் நானே
சொல்லும்முன் அதனை
மறந்தேன் தானே

எதைச்சொல்ல எதைவிட
என எண்ணும்போது
எதற்காகச் சொல்லணும்
எனுமெண்ணம் வந்தது

தெரியாதோ உனக்கு
என் எண்ணமெல்லாம்
தெரிந்தபின் உனக்கு
ஏன்சொல்ல வேண்டும்

கேட்கும்முன் அளிக்க
தெரிந்திட்ட உனக்கு
கூறத்தான் வேண்டுமோ
என்மனக் கணக்கு

ஆயினும் நீதான்
கேட்கவும் சொன்னாய்
அடிக்கடி வந்துமே
தட்டிடச் சொன்னாய்

தேடினால் கிடைக்கும்
என்றதினாலே நீ
சொன்னதை மட்டுமே
செய்கிறேன் இங்கு

சொன்னதை நானும்
செய்த பினாலும்
உன்னிடம் சொன்னதை
எண்ணியே பார்த்தேன்

சொல்லிட உன்னிடம்
ஒன்றுமில்லை என
சொன்ன ஒன்றை
எண்ணியே சிரித்தேன்

என்னுடன் இணைந்து
நீயுமே சிரிக்க
உள்ளம் நிறைந்திட
உன்னடிப் பணிந்தேன்

மத்திகிரி, 1-8-2018, இரவு, 11.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles