933 The noble status given by you
As you called us
To over lord (the nature)
You provided
Authority to us
As we become
Arrogant
We lost that
Glorious status
The loss is
Not very few
And how to say
Which are the losses?
We lost our
Relationship with you
We lost
Self control
Making the
Responsibility which you gave
As if our birth right
We lost that glory
Losing the modesty
In human relationship
We made it
Mere animal instinct
As we forgot to
Make the body as your temple
Finally
We fell down
As we become
Arrogant within
We lost our
Outer behavior also
By losing our
Harmony with nature
Finally we
Destroyed it
Finally we forced
You to come by giving up
Your noble status
To redeem us
Though we
Killed you on the tree
We refused to
Understand your greatness
Though we were
Redeemed and knew you
Again and again
We tortured you
Drowning in
Unending sorrow
We come back to you
To redeem us again
Though we live
Like this and lost
Till the end
On this earth
As you will
Take us to further shore for sure
We will regain that
Noble status again
Mathigiri, 1-8-2018, 1.30 p.m.
I wrote this song after reading and meditating on this point:
…In his mortality and weakness the human being stands in antithesis of God (cf. Num. 23:19f.; Isa. 31:3), but in his role of ruler he approximates a heavenly being. — Bruce K. Waltake and James M. Houston With Erika Moore, The Psalms as Christian Worship: a Historical Commentary, Cambridge, U.K. William B. Eerdmans Publishing Company, 2010, Psalm 8: 6, p. 268,
933 நீ தந்த மேன்மை
ஆண்டிட எம்மை
அழைத்ததினாலே
தந்தாய் எமக்கு
ஆளுகை தன்னை
ஆயினும் ஆணவம்
கொண்டதினாலே
இழந்தோம் அந்த
மேன்மை அதனை
இழந்த மேன்மை
கொஞ்சமோ சொல்ல
எதைஎதை என்று
எப்படிச் சொல்ல
உன்னிடம் கொண்ட
உறவை இழந்தோம்
உள்ளத்தை ஆளும்
வலிமை இழந்தோம்
கடமையாக நீ
தந்ததைக் கூட
உரிமையாக்கி
உன்னதம் இழந்தோம்
மனித உறவில்
மேன்மை நீங்க
மிருக உணர்வு
கொண்டுமே வாழ்ந்தோம்
மேனிதனை
கோயிலாக்க
மறந்த நாங்கள்
வீழ்ந்தே போனோம்
அகத்தில் கொண்ட
அழிவினாலே
புறத்தில் கூட
பொலிவை இழந்தோம்
இணைந்து வாழ்ந்த
இயற்கையோடு
முரண்டு வாழ்ந்து
அதனை அழித்தோம்
இறுதியாக உன்
மேன்மை துறந்து
எம்மை மீட்க
வந்திடச் செய்தோம்
மரத்தில் ஏற்றி
வதைத்த போதும்
உனது மாண்பை
உணர மறுத்தோம்
மீட்கப் பட்டு
உன்னை அறிந்தும்
மீண்டும் மீண்டும்
உன்னை வதைத்தோம்
மீள முடியா
துயரில் ஆழ்ந்து
மீண்டும் வந்தோம்
மீட்க வேண்டி
இறுதி வரையில்
இதனைப் போன்று
உலக வாழ்வில்
இழந்த போதும்
உறுதியாக நீ
கரையும் ஏற்ற
மீண்டும் பெறுவோம்
அந்த மேன்மை
மத்திகிரி, 1-8-2018, மதியம், 1.30