932 Should live hidden
I should live hidden
And others should forget about me
I should live
Only you alone filling my heart—I should….
Though I received a
Life surrounded by the world
Though you alone gave
Relatives and friends—I should….
Human relationship is better one
I am not denying it
Though I learnt to see you
In human relationship—I should….
Indeed it is true that
Living together is a blessing
When we worship together
Bhakti also will increase—I should…
Once I understood the
Joy in the life of recluse
As my heart longs only more of it
Understanding that you also provide it to me—I should….
What to say about
The greatness when we two alone together
As my heart is longing more and more of it
What can I say further—I should….
Mathigiri, 28-7-2018, 11.30 p.m.
Another song of my longing for a life of recluse.
932 மறைந்து வாழணும்
மறைந்து வாழ வேண்டும்
பிறர் மறக்க வாழவேண்டும்
மனது முழுதும் நீமட்டும்
நிறைந்து வாழ வேண்டும்—மறைந்து….
ஊரும்-உலகம் சூழ்ந்து வாழும்
வாழ்வைப் பெற்ற போதும்
உறவு-சுற்றம் நட்புஎல்லாம்
நீயே தந்த போதும்—மறைந்து….
மனிதஉறவு சிறந்த ஒன்று
மறுக்க வில்லை நானும்
மனித உறவில் உன்னைக்காணும்
வழியைக் கற்ற போதும்—மறைந்து….
கூடிவாழ கோடி நன்மை
என்ப திங்கு உண்மை
கூடித் தொழ பத்திபெறும்
வலிமை என்ற போதும்—மறைந்து….
மறைந்து வாழும் வாழ்விலுள்ள
மகிழ்வை அறிந்த பின்னே
மனது மேலும் அதையேநாட
புரிந்த நீயும் அதையேதர—மறைந்து….
தனித்து நீயும் நானுமிருக்கும்
மகிமை என்ன சொல்ல
அதை மீண்டும்மீண்டும் மனதுநாட
வேறு என்ன சொல்ல—மறைந்து….
மத்திகிரி, 28-7-2018, இரவு, 11.30