Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 931

$
0
0

931 Millions of blessings

If I count all the blessings given by you
They are millions
I only thinking
What you have done so are

This human creation
Is the best blessing
Providing mind and intellect
Shows your nobleness

You helped us
To grow by parents and relatives
You made us to live
With relatives and friends

Knowing me
And my thoughts
To live cordially
You gave friends

In order to live
As per the desire of my heart
You provided
So many opportunities

In proper time
By seeking me
You received me
As your disciple

Knowing my nature
Thinking about my welfare
Forgetting my shortcomings
You stayed with me

Though many
Ups and downs came
You led my life
So far

You kept trust
In me that
Rest of the life
Will be the same

Thinking them all
To praise you
You gave
This opportunity

Thinking only
This now
I came to your feet
To say thanks

Mathigiri, 27-7-2018, 10.40

Another song of recalling all that God has done to me.

931 கோடி நன்மைகள்

எண்ணினால் கோடிதான்
நன்மைகள் யாவுமே
எண்ணித்தான் பார்க்கிறேன்
செய்ததை நீயுமே

மனிதனாய்ப் படைத்தது
மாபெரும் நன்மை
மனதுடன் அறிவையும்
தந்ததுன் மேன்மை

தாய்த்தந்தை சுற்றம்
தாங்கிட வளர்த்தாய்
ஊருடன் உறவுடன்
வாழ்ந்திட வைத்தாய்

எண்ணத்தை அறிந்து
என்னையும் உணர்ந்து
இசைந்து பழகிட
நண்பர்கள் தந்தாய்

என்னுள்ளம் போல
நானுமே வாழ
ஏற்ற வாய்ப்புகள்
திறமைகள் அளித்தாய்

ஏற்ற காலத்தில்
நாடியே வந்து
என்னையுன் சீடனாய்
ஏற்றுமே கொண்டாய்

எண்குணம் அறிந்து
என்நலம் நினைந்து
என்குறை மறந்து
என்னுடன் இருந்தாய்

ஏற்ற இறக்கங்கள்
எத்தனை வந்தும்
இதுவரை வாழ்வை
நடத்தியும் கொடுத்தாய்

இதுபோல் எஞ்சிய
காலமும் இருக்கும்
என்ற நம்பிக்கை
என்னுள் வைத்தாய்

இவற்றை எண்ணி
உன்னை துதிக்க
இந்த வாய்ப்பை
எனக்குமே தந்தாய்

இதைத்தான் நானும்
இப்போது எண்ணி
நன்றியும் சொன்னேன்
திருவடி நன்னி

மத்திகிரி, 27-7-2018, இரவு 10.40


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles