1070நீபோட்ட கோடு
நேர்கோடு நீபோட்டு
தெளிவாகக் காட்டினாய்
நடப்பவை அனைத்திலும்
உன்சித்தம் காட்டினாய்
அதன்மீது பலகோடு
நானுமே போட்டாலும்
இறுதியில் உன்எண்ணம்
நடத்தியேக் காட்டினாய்
ஆயினும் உன்கோட்டை
நானுமே தாண்டினால்
அதற்கான விலைஒன்றை
தந்திட நீவைத்தாய்
நான்தாண்டிச் சென்றாலும்
பிறர்சொல்லித் தாண்டினும்
விளைவை இரண்டிலும்
ஒன்றாகக் காட்டினாய்
நீபோடும் கோடு
நேராக இருக்குது
நிலயான குறிக்கோளை
கண்முன்னே காட்டுது
இடையினில் தடுமாறி
வளைந்து நான்போக
இலக்கோடு குறிக்கோளும்
நெளிந்தே போகுது
தெளிவாக உன்கோட்டில்
நானுமே ஓடிட
இடையில் தடைகள்
இல்லாமல் போகுது
எனக்காக நீபோட்ட
கோட்டினில் ஓடாமல்
பிறர்கோட்டில் நானோட
அவர்மீது நான்மோத
இருவரும் தடுமாறி
வீழ்ந்துமே போகிறோம்
அவர்வீழக் காரணம்
நானுமே ஆகிறேன்
இனியும் இதுபோல
ஓடாமல் இருக்கணும்
என்கோட்டில் ஓடிட
உன்னருள் காட்டணும்
மத்திகிரி, 19-2-2019, இரவு, 11.45